TNPSC Group 2 Result Date : TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

TNPSC Group 2 Result Date :

Group 2 தேர்வு முடிவுகள் (TNPSC Group 2 Result Date) எப்போது வெளியாகும் என்றும் அரசு ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறது என்றும் தேர்வர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

அரசுத் துறைகளில் இரண்டாம் நிலையில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத சுமார் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் 9 லட்சம் தேர்வர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். மொத்தமாக 116 நேர்காணல் (Interview) பதவிகளுக்கும் நேர்காணல்  (Non Interview) இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வானது நடத்தப்பட்டது.

நவம்பரில் வெளியான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் :

இதற்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று TNPSC முன்னதாக அறிவித்தது. பிறகு அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு (Written Exam) விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வானது கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.

தாமதம் ஏன்?

தேர்வர்கள் 2022 மே மாதத்தில் Group 2 முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில் 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என ஒட்டுமொத்த தேர்வு செயல்முறை 2 ஆண்டுகளைக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

6000 பேருக்கு அரசுப் பணி :

TNPSC Group 2 Result Date : இதற்கிடையே மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு “Group 2  முதன்மைத் தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும்” என்று எற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் (டிச.10) இன்று வரைதேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும்பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். முடிந்தவுடனே முடிவுகள் வெளியிடப்பட்டு விடும்’ என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply