TNPSC Group 4 Exam : TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்

தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் மேலும் 480 பணியிடங்கள் (TNPSC Group 4 Exam) அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 6,244 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 4 Exam :

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட காலியாக உள்ள 6,224 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்விற்கு சுமார் 20 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இடையில், TNPSC குரூப் 4 தேர்வானது (TNPSC Group 4 Exam) ஜூன் 9 ஆம் தேதி மாநிலங்கள் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் சுமார் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். இதற்கு இடையில் இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு :

இந்நிலையில், தற்போது எழுதப்பட்ட தேர்வு முடிவுகள் (TNPSC Group 4 Exam) எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில், அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் 480 கூடுதல் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply