Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 2-வது முறையாக அதிகரித்து முக்கிய அறிவிப்பை (Tnpsc Group 4 Vacancies Increase) வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில் குரூப் 4 பணிக்கு மேலும் கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மேற்கொண்டு வருகிறது.

மேலும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல பிரிவுகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) உட்பட 23 வகையான பணிகளுக்கு மொத்தம் 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.    

குரூப் 4 தேர்வு :

இந்த குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இந்த குரூப் 4 தேர்வை எழுதிய தேர்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் குரூப் 4-க்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி கூடுதலாக 480 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பால் குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை 6,244-ல் இருந்து 6,724 ஆக உயர்ந்தது. மேலும் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் என்ற அளவில் காலிப்பணியிடங்களை உயர்த்த வேண்டும் என தேர்வர்கள் கூறினர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 2-வது முறையாக குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

Tnpsc Group 4 Vacancies Increase - 2,208 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது :

இந்த அறிவிப்பில் குரூப் 4 நிலையிலான அரசு பணிக்கு கூடுதலாக 2,208 (Tnpsc Group 4 Vacancies Increase) பணியிடங்கள் நிரப்பப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,724-ல் இருந்து 8,932 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply