TNPSC Recruitment 2024: டிஎன்பிஎஸ்சி- யில் ரூ. 57,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு.!

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  Tamil Nadu Public Service Commission (TNPSC) வரும் 2026 ஆம் வருடம் ஜனவரிக்குள் 18 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தயாராகி வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பில் மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் பிரபாகர் பொறுப்பேற்ற பிறகு அனைத்து பணிகளும் வேகமெடுத்துள்ளன.

TNPSC Recruitment 2024: : காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் சேவை (Technical Services) பணியிடங்களுக்கு 105 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Recruitment 2024: வயதுத் தகுதி (Age)

இந்த தொழில்நுட்பப் சேவை (Technical Services) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 தேதி வரை 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST, MBC-DNC, BC & BCM போன்ற பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Recruitment 2024: சம்பளம் (Salary Process)

இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் சேவை (Technical Services) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.57,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Recruitment 2024: தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் சேவை (Technical Services) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வானது  இரண்டு தாள்கள்  கொண்டது. முதல் தாளில் தமிழ் கட்டாய தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு குறித்த வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் தாளில் சம்மந்தப்பட்ட துறை தொடர்பான வினாக்கள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பின்னர் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Recruitment 2024: விண்ணப்பக் கட்டணம் (Application Fees)

இந்த தொழில்நுட்பப் சேவை (Technical Services) பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். மேலும் SC/ST, MBC – DNC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date)

இந்த தொழில்நுட்பப் சேவை (Technical Services) பணியிடங்களுக்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.09.2024 ஆகும்.

மேலும் விவரங்கள் அறிய

https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply