TNSTC Notification 2025 : அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 25 மண்டலங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் (TNSTC Notification 2025) காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பானது போக்குவரத்து நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC Notification 2025

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இந்த அறிவிப்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 364 பணியிடங்களும், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் (TNSTC Notification 2025) கழகத்திற்கு 318 பணியிடங்களும், விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்திற்கு 88 பணியிடங்களும், வேலூர் மண்டலத்திற்கு 50 பணியிடங்களும்,

மேலும் காஞ்சிபுரம் போக்குவரத்துக் மண்டலத்திற்கு 106 பணியிடங்களும், கடலூர் போக்குவரத்துக் மண்டலத்திற்கு 41 பணியிடங்களும், திருவண்ணாமலை மண்டலத்திற்கு 37 பணியிடங்களும், கும்பகோணம் போக்குவரத்துக் மண்டலத்திற்கு 756 பணியிடங்களும், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்திற்கு 486 பணியிடங்களும், கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்திற்கு 100 பணியிடங்களும், ஈரோடு கோட்ட போக்குவரத்துக் கழகத்திற்கு 119 பணியிடங்களும், ஊட்டி கோட்ட போக்குவரத்துக் கழகத்திற்கு 67 பணியிடங்களும், மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்திற்கு 600 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 3274 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.கல்வி தகுதி (Educational Qualification)

போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்யுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (TNSTC Notification 2025) மற்றும் குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவி சான்று, நடத்துநர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.வயது தகுதி (Age)

போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி 24 வயது (TNSTC Notification 2025) முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

4.சம்பளம் (Salary)

TNSTC Notification 2025 - Platform Tamil

போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு (TNSTC Notification 2025) மாதம் ரூ.24000 முதல் ரூ.56200/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு (TNSTC Notification 2025) எழுத்துத் தேர்வு (Written Exam), செய்முறைத் தேர்வு (Recipe Selection), நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)

போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஓட்டுநர் மட்டும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.1180 ஆகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.590 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு (TNSTC Notification 2025) மார்ச் 21-ம் தேதி (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply