TNSTC Recruitment 2023 : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
TNSTC Recruitment 2023 : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சமீபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை தற்போது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த TNSTC வேலை அறிவிப்புக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.arasubus.tn.gov.in இதில் 18.08.2023 முதல் 18.09.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர்அதிகாரிகள் 685 பணியிடங்களை ஆன்லைன் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தகுதியுடைய அனைத்து ஆர்வலர்களும் TNSTC வேலைகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம், அதாவது arasubus.tn.gov.in ஆட்சேர்ப்பு 2023. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18-09-2023 ஆகும்.
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் (TNSTC)
அறிவிப்பு தேதி :
18.08.2023 மதியம் 1 மணி முதல்
அதிகாரப்பூர்வ இணையதளம் :
www.arasubus.tn.gov.in என்ற விண்ணப்பத்தில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.
TNSTC Recruitment 2023 - காலியிடம் :
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையில் மொத்தம் 685 இடங்கள் உள்ளன.
TNSTC Recruitment 2023 - பணியின் பெயர் :
டிரைவர் மற்றும் நடத்துனர்
TNSTC Recruitment 2023 - கல்வித்தகுதி :
பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் பேச, எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் கனரக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம் மற்றும் 01.01.2023-க்கு முன் செல்லுபடியாகும் நடத்துனர் சான்றிதழ்.
TNSTC Recruitment 2023 - தகுதியுடைய வயது :
குறைந்தபட்ச வயது 24, OC விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது – 40 ஆண்டுகள் MBC/BC/DNC/SC/ST – 45 ஆண்டுகள்
பணியிடம் : தமிழகதில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணி வழங்கப்படும்.
TNSTC Recruitment 2023 - விண்ணப்பக் கட்டணம் :
1. SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம் – ரூ.590/-
2. பொதுப்பிரிவினருக்கு – ரூ.1180/-
TNSTC Recruitment 2023 - சம்பள விவரங்கள் :
டிரைவர் மற்றும் நடத்துனர் – ரூ. 17,700 – 56,200/- மாதம்
TNSTC Recruitment 2023 -
தேர்வு செய்யும் நடைமுறை :
1. எழுத்துத் தேர்வு/உடல் தேர்வு
2. நேர்காணல்
கடைசி தேதி : 18.09.2023 மதியம் 1 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.