TNSTC Recruitment 2024 : 499 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் Tamilnadu State Transport Corporation காலியாகவுள்ள டிப்ளமோ, பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பானது (TNSTC Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த பயிற்சி பணியிடங்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் சென்னை, கோவை, விழுப்புரம், திருநெல்வேலி, சேலம் ஆகிய மண்டலங்களில் நிரப்பப்படுகிறது.         

TNSTC Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate Engineering Apprentices) பணியிடங்களுக்கு 201 பணியிடங்களும், பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices) பணியிடங்களுக்கு 158 காலிப்பணியிடங்களும், பட்டயப் பயிற்சி (Technician Diploma Apprentices) பணியிடங்களுக்கு 140 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 499 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு (TNSTC Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு Engineering பாடப்பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு BBA, BCA, BBM, B.sc, B.com படித்திருக்க வேண்டும் எனவும் பட்டயப் பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. வயது தகுதி (Age) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : அரசு போக்குவரத்து கழகத்தில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு (TNSTC Recruitment 2024) தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருட பயிற்சியுடன் மாதம் ரூ.9000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : அரசு போக்குவரத்து கழகத்தில் இந்த மூன்று பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கும் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnstc.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Application Last Date) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு (TNSTC Recruitment 2024) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.10.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply