T+O Settlement : பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மார்ச் 28 முதல் T+0 உடனடி செட்டில்மெண்ட் முறை

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு T+0 செட்டில்மெண்ட் எனப்படும் உடனடி செட்டில்மெண்ட் முறை ஆனது மார்ச் 28-ம் தேதி முதல் சோதனை முறையில் கொண்டுவரப்படுகின்றது. பங்கு வர்த்தகத்தில்  T+0 செட்டில்மெண்ட் என்பது ஒரு உடனடி செட்டில்மெண்ட் முறை ஆகும். பங்குகளை விற்றால் இந்த T+0 செட்டில்மெண்ட் மூலம் சந்தை முதலீட்டாளர்களுக்கு அடுத்த நிமிடமே பணம் ஆனது கிடைத்துவிடும்.  

SEBI ஆனது பங்குச் சந்தையில் வரும் மார்ச் 28-ம் தேதி முதல் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு T+0 செட்டில்மெண்ட்  (T+0 Settlement) முறையை சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. SEBI அமைப்பு ஆனது பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த மேம்படுத்தும் பணிகளில் ஒரு பகுதியாக, தற்போது செட்டில்மென்ட் முறையில்  ஒரு மாற்றம் கொண்டு வர SEBI திட்டமிட்டிருக்கிறது.

1990-களில் பங்குச் சந்தை செட்டில்மென்ட் ஆனது 14 நாள்களாக இருந்தது. இந்த 14 நாள் பங்குச் சந்தை செட்டில்மென்ட் ஆனது படிப்படியாகக் குறைந்து மூன்று நாள்களானது. 2003-ம் ஆண்டு முதல் டி+2 என்னும் செட்டில்மென்ட் முறை ஆனது நடைமுறைக்கு  கொண்டுவரப்பட்டது.

பங்கு வர்த்தகத்தில் தொழில்நுட்பம் பெரிதாக மேம்படாத  காலக்கட்டத்தில்  டி+2 Settlement என்பது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு O.K. என ஏற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலக்கட்டத்தில் இந்த 2  நாள் காலத்தைக் குறைக்க வேண்டும் எனப் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாக SEBI  தெரிவித்திருக்கிறது.

14 days Settlement :

  • பங்குச் சந்தை செட்டில்மென்ட்  ஆனது1990-களில் 14 நாள்களாக இருந்தது. இந்த 14 நாள் செட்டில்மென்ட் என்பது படிப்படியாகக் குறைந்து மூன்று நாள்களானது.

T+2 Settlement :

  • T+2 Settlement என்னும் 2  நாள் பங்குச் சந்தை செட்டில்மென்ட் ஆனது 2003-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.அதாவது, ஒரு பங்கை வாங்குகிறோம் என்றால் 2 நாள்களில் நம்முடைய டிமேட் கணக்குக்கு அந்த பங்குகள் வரும். அதேபோல ஒரு பங்கை விற்கிறோம் என்றாலும் இரு நாள்களில் பணம் நம்முடைய கணக்குக்கு வரும். இந்த  முறை ஆனது T+2 Settlement என அழைக்கப்படுகிறது.
  • இந்த இரு நாள்களில் வாங்கிய பங்குக்கு பணம் ஒரு வேளை செலுத்தப்படவில்லை என்றால், அந்த பங்குகள் ஆனது ஏலம் விடப்பட்டு உரியவர்களுக்கு பணம் கொடுக்கப்படும்.

T+1 Settlement :

  • T+1 Settlement ஆனது1 நாள் செட்டில்மென்ட் ஆகும். இந்த T+1 Settlement தீர்வு சுழற்சியின் கீழ், பத்திரங்கள் மற்றும் நிதிகள் ஆனது வர்த்தகத்தின் அடுத்த நாளுக்குள் தீர்க்கப்படுகின்றன.

T+O Settlement :

  • SEBI ஆனது பல வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) மற்றும் நிறுவன முதலீட்டாளர்களால் எழுப்பப்பட்ட பணப்புழக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்ய  முயற்சித்துள்ளது.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள்ள சிக்கல் ஆனது இந்தியாவில் காலையில் அவர்கள் பங்குகளை வாங்குகிறார்கள் என்றால் அமெரிக்காவில் அப்போது இரவாக இருக்கும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நாளில் இந்தப் பரிமாற்றத்தைச் செய்வது கடினம் என்பதால் அவர்களிடையே எதிர்ப்பு இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply