Today Weather Report : சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழை கொட்டும் - வானிலை மையம் முக்கிய அறிவிப்பு

Today Weather Report :

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் (Today Weather Report) தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை இல்லாமலேயே இருந்து  வந்தது.

இதனால் சென்னை மக்கள் இந்த 2023-ஆம் ஆண்டு போதியளவில் மழை பெய்யாமல் போகுமோ என்று அஞ்சி வந்தனர். தற்போது சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த  நிலையில் வானிலை மையம் முக்கியமான அறிவிப்பு (Today Weather Report) ஒன்றை வெளியிட்டுள்ளது.

Today Weather Report - வானிலை மையம் வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு :

Today Weather Report : தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில் இன்று காலை வரை கனமழை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் விடிய விடிய மழை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் ஆனது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை வரை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசை காற்று வலுவடைந்துள்ளதாலும் தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கனமழை ஆனது இன்று காலை வரை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, வரும் நாட்களில் மழை மேலும் நன்றாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. மேலும், வங்கக் கடலில் வரும் நாட்களில் சலனங்கள் ஏற்படும் என்றும் இதனாலும் கூட மழை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இப்போது நல்ல மழை பெய்து வருகிறது :

தமிழ்நாட்டில் இப்போது தேனி, திருப்பத்தூர், மதுரை புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக கோடம்பாக்கம், டிஜிபி அலுவலகம், செங்கல்பட்டு, மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் தல 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல கனமழை ஆனது புழல், மணலி, அம்பத்தூர் பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வருகிறது.

இதற்கிடையே நேற்று மதியம் சென்னை வானிலை மையம் வெளியிடும் செய்திக்குறிப்பில் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்கள் என மொத்தம் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல  வானிலை மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை கொட்டும் என்பது குறித்தும் தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி என மொத்தம் 29 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply