Tomato Benefits In Tamil : தினமும் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நம் அன்றாட சமையலில் சில முக்கியமான காய்கறிகள் உள்ளன. அவை இல்லாமல் சமையல் முழுமையடையாது. அத்தகைய காய்கறிகளில் தக்காளியும் ஒன்றாகும். அதனால்தான் மக்கள் தக்காளியை எவ்வளவு விலை உயர்ந்தாலும் வாங்குகிறார்கள். தக்காளியில் பல ஆரோக்கிய நன்மைகள் (Tomato Benefits In Tamil) உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

தக்காளி

தக்காளி தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் தற்போது தக்காளி ஒரு முக்கியமான காய்கறியாக மாறிவிட்டது. முக்கியமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறியாக தக்காளி இருக்கிறது. தக்காளியை வைத்து சாலட், பழச்சாறுகள் மற்றும் சூப் ஆகிவற்றை செய்கின்றனர். தக்காளியில் வைட்டமின் கே, சி, பி1, பி3, பி5, பி6, பி7 மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக, தக்காளியில் (Tomato Benefits In Tamil) பொட்டாசியம், குரோமியம், கோலின், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. எனவே தக்காளியை உட்கொள்வதன் மூலம் பல வகையான சத்துக்களை நாம் பெறலாம்.

தக்காளியின் நன்மைகள் (Tomato Benefits In Tamil)

சரும பராமரிப்பிற்கு உதவுகிறது

தக்காளி சாற்றை நமது சருமத்தில் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய உதவுகிறது. மேலும் இதனை தினமும் சருமத்தில் தடவுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். தக்காளியில் (Tomato Benefits In Tamil) நம் சருமத்திற்கு நன்மை செய்யும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சருமத்தைப் பாதுகாக்க தக்காளிச் சாற்றைப் பயன்படுத்தலாம். மேலும் தக்காளியை சாப்பிட்டு வருவதன் மூலமும் முகம் பொலிவுடன் இருக்கும்.

நீரிழிவை நிர்வகிக்க

ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தக்காளியை தினமும் சாப்பிடுவதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க முடியும். இது டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் வீக்கம் மற்றும் திசு சேதம் போன்ற சிக்கல்களையும் குறைக்கிறது. எலிகள் மீதான ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஆனால் இதை உறுதிப்படுத்த இது மனிதர்களிடம் சோதிக்கப்பட வேண்டும்.

இதய ஆரோக்கியத்திற்கு

தக்காளியில் உள்ள ஹீரோ லைக்கோபீன் நமது இதய ஆரோக்கியத்திற்கு (Tomato Benefits In Tamil) உதவும் முக்கிய சத்தாக உள்ளது. தக்காளியில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. நமது இதயம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். லைகோபீனுக்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும் திறன் உள்ளது மற்றும் அதன் பலன்களை அறிய சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்து, இதயத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க

தக்காளி சாப்பிடுவதால் புகைபிடிப்பதை விட்டுவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு, புகைபிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தக்காளி உதவுகிறது. தக்காளியில் குமரிக் அமிலம் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இவை சிகரெட் புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உருவாவதை தக்காளி (Tomato Benefits In Tamil) தடுக்கிறது. குறிப்பாக, தக்காளியை கொட்டை இல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உருவாவதையே சுத்தமாக தடுக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply