Tomato Price Reduced: தக்காளியின் விலையை இன்று முதல் குறைக்க வேண்டும்...

தக்காளியின் விற்பனை விலையை இன்று முதல் ரூபாய் 70 க்கு விற்க வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை ஆணை.

தமிழ்நாட்டில் தக்காளியின் விலை இதுவரை காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தக்காளியின் விளைச்சல் சற்று அதிகமாக உள்ளதால் வட மாநிலங்கள் அனைத்திற்கும் அங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளிகள் வடமாநிலங்களுக்கு செல்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு மலிவு விலையில் தக்காளிகளை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

Tomato Price Reduced - மத்திய அரசு உத்தரவு :

தக்காளியின் விலை உயர்வால் எளிய மக்கள் தக்காளியை வாங்குவதே மறந்து விட்டார்கள். நாடு தழுவிய இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் டெல்லி போன்ற பகுதிகளில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு வாணிப கூட்டமைப்பு ஆகிய இரண்டு அமைப்பிற்கும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த இரண்டு வகையான அமைப்புகளும் தக்காளியை ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. டெல்லியில் ஒரு வாரத்திற்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிறகு 16ஆம் தேதி முதல் 80 ரூபாயாக குறைக்கப்பட்டது. இது இன்னும் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் முயற்சியின் விளைவாக இன்று முதல் தக்காளியின் விலை ரூபாய் 70 க்கு விற்பனை செய்யுமாறு உத்தரவு பெற்றுள்ளது.

இன்று வரை தக்காளி 390 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு இங்கிருந்து விற்பனை செய்யப்படுகிறது.

எச்.ராஜா வின் கருத்து :

தக்காளியின் விலை உயர்வு குறித்து எச்.ராஜா அவர்களிடம் கேட்டபோது, தக்காளி சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவு உடல் உழைப்பு செலுத்துகிறார்கள். தக்காளியின் விலை 40 ரூபாய்க்கு கீழே குறைந்தால் அரசே அதனை வாங்குமாறு முடிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் தக்காளியை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் வாங்காமல் விட்டாலே தக்காளியின் விலையை எளிமையாக குறைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply