Forbes Top 10 Richest People In India List-யை வெளியிட்டுள்ளது

இந்தியாவின் Top 10 பணக்காரர்கள் 2024 பட்டியலை (Top 10 Richest People In India List) அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ளது. 116 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மிகப்பெரிய பங்குதாரருமான முகேஷ் அம்பானி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Forbes Top 10 Richest People In India List - Forbes இந்தியாவின் Top 10 பணக்காரர்கள் பட்டியல்:

  • முகேஷ் அம்பானி – இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் மிகப்பெரிய பங்குதாரரும் ஆவார். இவர் இந்தியாவின் Top 10 பணக்காரர்கள் பட்டியலில் (Top 10 Richest People In India List) முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது  116 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 
  • கௌதம் அதானி – இவர் அதானி குழுமத்தின் தலைவர் ஆவார். இவர் இந்தியாவின் Top 10 பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது 84 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 
  • ஷிவ் நாடார் – இவர் HCL Technologies நிறுவனர் ஆவார். இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.  இவரது சொத்து மதிப்பு ஆனது 36.9 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 
  • சாவித்ரி ஜிண்டால் – இவரது சொத்து மதிப்பு ஆனது 35.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆறாவது இடத்திலிருந்தவர், தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
  • திலீப் ஷாங்வி – இவர் சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனர் ஆவார். இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது 26.7  பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
  • சைரஸ் பூனவல்லா – இவர் உலக அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் ஆவார்.  இவர்  ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது 21.3  பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
  • குஷால் பால் சிங் – இவர் ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF லிமிடெட் தலைவர்  ஆவார். இவர் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது  9  பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
  • குமார் மங்கலம் பிர்லா – இவர் ரியல் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார். இவர் எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ஆனது 19.7  பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
  • ராதாகிஷன் தமானி – இவர் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். இவர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது 17.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

  • லக்ஷ்மி மிட்டல் –   இவர் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஆர்செலர் மிட்டலின் தலைவர்  மற்றும்  CEO ஆவார்.   இவர்  பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ஆனது  16.4  பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply