Top 100 Medical College List : உலகின் தலைசிறந்த மருத்துவ கல்லுாரிகளின் பட்டியலில் சென்னை மருத்துவ கல்லுாரி 60-வது இடம் பிடித்துள்ளது

அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு முன்னணி இதழ் ஆனது 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி ஆனது அந்தப் பட்டியலில் 60-வது இடத்தை (Top 100 Medical College List) பிடித்துள்ளது.

இந்த பட்டியல் மதிப்பீடு ஆனது

● மருத்துவக் கல்வியின் சிறந்த துறைகள்
● மருத்துவக் கல்வியின் தரம்
● மருத்துவக் கல்வி துறைகளில் மாணவர் சேர்க்கை
●மருத்துவக் கல்வியின் உலகளாவிய நன்மதிப்பு உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கிறது.

உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லுாரிகளின் பட்டியல் (Top 100 Medical College List)

● முதல் இடத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

● 2 முதல் 21 வரை உள்ள இடங்களை அமெரிக்காவில் உள்ள பிற அமெரிக்க மருத்துவக் கல்லூரிகள் பிடித்துள்ளன.

● 22-வது இடத்தை டெல்லி எய்ம்ஸ் கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.

● 37-வது இடத்தை புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.

● 46-வது இடத்தை வேலூர் CMC மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.

● 55-வது இடத்தை புதுச்சேரி JIPMER மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.

● 60-வது இடத்தை சென்னை மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.

● 69-வது இடத்தை வாரணாசி மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.

இந்த உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லுாரிகளின் பட்டியலில் மொத்தமாக 48 கல்லூரிகள் அமெரிக்காவிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Top 100 Medical College List - Platform Tamil

சென்னை மருத்துவக் கல்லுாரி

சென்னை மருத்துவக் கல்லுாரி ஆனது 190 ஆண்டுகால பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது. இந்த மருத்துவக் கல்லுாரியில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் (Top 100 Medical College List) இந்த மருத்துவக் கல்லுாரி ஆனது ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக இந்த மருத்துவக் கல்லுாரியின் பல்நோக்கு ஆராய்ச்சி பிரிவில், மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோர், மருத்துவம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மருத்துவ கல்லுாரிக்கு மேன்மைமிகு விருது

மத்திய அரசு ஆனது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லுாரிகளின் ஆய்வு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து, அதற்கான விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த 2024 ஆம் ஆண்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் 10-க்கு 9 மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவ கல்லுாரி (Top 100 Medical College List) சிறந்து விளங்கியதால், மேன்மைமிகு விருதை சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் கங்காதரன், செயலர் ராஜீவ் பால் ஆகியோர் முன்னிலையில் டில்லியில் 20.03.2025 அன்று நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லுாரி முதல்வர் தேரணிராஜன் விருதை பெற்றுக் கொண்டார்.

Latest Slideshows

Leave a Reply