Top 5 Business Man Of Tamil Nadu : தமிழ்நாட்டின் Top 5 தொழில் அதிபர்கள்
Top 5 Business Man Of Tamil Nadu :
திரு.சி.கே.ரங்கநாதன் CavinKare நிறுவனத்தின் தலைவர் :
திரு.சி.கே.ரங்கநாதன் CavinKare-ரின் நிறுவனர் மற்றும் தலைவர். தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள சிறிய கடற்கரை நகரத்தில் பிறந்தவர். இவர் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின் குடும்பத் தொழிலில் சிறிது காலம் ஈடுபட்டு பிறகு தனது சொந்த சிக் (Chik) ஷாம்பு தயாரிப்பு வணிகத்தை தொடங்கினார். இவர் 1983 இல் ரூ.15,000 முதலீட்டில் தொடங்கிய சிக் இந்தியா (Chik India) ஆனது 1990 இல் பியூட்டி காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது. பியூட்டி காஸ்மெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் பின்னர் 1998 இல் கேவின்கேர் பிரைவேட் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது.
இந்த நிறுவனம் உணவு, பானங்கள், பால் மற்றும் சிற்றுண்டி வகைகளிலும் விரிவடைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பன்முகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் Green Trends சலூன் பிரிவின் கீழ், தனிப்பட்ட ஸ்டைலிங் மற்றும் அழகு தீர்வுகளை வழங்குவதில் தெளிவான கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் ‘Unisex Saloons’ என்ற Concept-ஐ மிகவும் பிரபலப்படுத்தியது. சென்னையில் 39,000 சதுர அடி அதிநவீன CavinKare ஆராய்ச்சி மையம் (R&D) உள்ளது. CavinKare ஆராய்ச்சி மையம் (R&D) இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையால் (DSIR) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Namma Family Group Founder & Chairman Ponnusamy Karthik :
சிறிய முதலீட்டில் 2016 இல் 5 தொழில் வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் தனது Namma Family Builder & Developer Company சொந்தத் தொழிலை Mr.A.Ponnusamy Karthik அவர்கள் தொடங்கினார். இந்நிறுவனம் Namma Family Group என்று 2019-இல் வளர்ச்சி பெற்றது. அவர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறார். தலைவர் Mr.A.Ponnusamy Karthik அவர்கள் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சி மூலம் Real Estate & Construction, Import & Export (Tender Coconut) & Business Development போன்ற பல்வேறு வணிகங்களில் விரிவடைந்துள்ளார். Mr.A.Ponnusamy Karthik அவர்கள் ஒரு Anna University பொறியியல் பட்டதாரி ஆவார்.
உலகில் கடின உழைப்பு மற்றும் முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என கடக்க முடியாத முரண்பாடுகளை (தடைகளை) திறமையாக சமாளித்தவர். இந்நிறுவனம் Field Workers, Tele Callers, Marketing People மற்றும் Digital Marketing Team ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டு சென்னை முழுவதும் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் நிலைக்கு இந்த நிறுவனம் மேன்மை பெற்று வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் எப்போதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் தொழில்முறை சேவைகளை வழங்கி ஒரு நல்ல Brand Image (பிராண்ட் பெயரை) சந்தையில் பெற்றுள்ளது.
Namma Family Group ஆனது அதன் அணுகுமுறைகள் மற்றும் புதுமைகள் ஆகியவற்றில் மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வேறுபட்டு முன்னோக்கி செல்கிறது. வாழ்க்கையில் கடின உழைப்பு மற்றும் முயற்சி முன்னுக்கு வர அழைத்துச் செல்லும், மேலும் தொடர்ந்து முன்னேறுங்கள் என Mr.A.Ponnusamy Karthik அவர்கள் Youtube-பில் சமுதாயத்திற்கு தேவையான உயர்ந்த மற்றும் சிறந்த கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார். அவர் “செயல்” என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஒரு நல்ல குடிமகனாக மற்றும் சமுதாய ஆர்வலராக சீரிய தன்னார்வ சமுதாய தொண்டுகளை செய்து வருகிறார்.
பழனிசாமி ராமசாமி KPR மில்லின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார் :
Kpr Mill Limited ஆனது 19 மார்ச் 2003 இல் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனமாகும். இது ஒரு நூல், துணி & வெள்ளை படிக சர்க்கரை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை தளமாகக் கொண்ட இந்த ஜவுளி நிறுவனம் நூல், துணிகள், ஆடைகள், பச்சை மின்சாரம், சர்க்கரை மற்றும் எத்தனால் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த Kpr நிறுவனத்தின் பிற பிரிவுகளில் ஜவுளி, மற்றும் சர்க்கரை அடங்கும். Kpr Mill Limited-ன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் INR 55.00 கோடி ஆகும். இதன் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் INR 34.18 கோடி ஆகும்.
பழனிசாமி ராமசாமி KPR மில்லின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். KPR நிறுவனம் ₹250 கோடி செலவில் ஆடை செயலாக்க திறனை விரிவுபடுத்துகிறது. மேலும் KPR சூரிய சக்தி ஆலை ₹100 கோடியுடன் சுமார் 25 மெகாவாட் திறன் கொண்டது. இதன் மூலம் நமது சூரிய மற்றும் காற்றாலை திறன் சுமார் 100 மெகாவாட்டை எட்டும். Kpr Mill Limited இன் செயல்பாட்டு வருவாய் வரம்பு 31 மார்ச் 2023 அன்று முடிவடையும் நிதியாண்டில் INR 500 கோடிக்கு மேல் உள்ளது. Kpr Mill Limited நிறுவனத்தில் 13 இயக்குநர்கள் உள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்காக நிறுவனம் ₹1,100 கோடி மதிப்பிலான ஆடை ஆர்டர்களை Kpr Mill Limited எடுத்துள்ளது.
போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் :
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த போத்தி தன் ஊரில் நெய்த துணிகளை, கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலை சிறிய அளவு முதலீட்டில் தொடங்கி இன்று ஜவுளி வியாபாரத்தில் ஜாம்பவான்களாக தடம் பதித்துள்ளனர். இவர்கள் தற்போது தங்க நகை வியாபாரத்தில் களம் இறங்கியுள்ளனர். வில்லிபுத்தூரில் பேருந்து நிலையம் அருகில் 1977-ம் ஆண்டு ஒரு நாளைக்கு 50 ரூபாய், 100 ரூபாய் லாபத்தை எதிர்பார்த்து போத்தீஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளில் திருநெல்வேலி, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உட்பட 18 கிளைகள் வரை விரிவடைந்து பெரியதொரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. போத்தீஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க புதுப்புது வெரைட்டிகள், டிரெண்டுகளை மற்றும் நிறைய புதுப்புது மார்க்கெட்டிங் முயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறது. போத்தீஸ் நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது. போத்தீஸ் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் (Customer Care) ஒரு ஆடையின் நிறத்தைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அந்த ஆடை வாடிக்கையாளர்களிடம் சென்றடைவது வரை எல்லாவற்றையும் மிக நுணுக்கமாகக் கவனிக்கிறது.
ஆச்சி குழுமத்தின் CEO பத்மசிங் ஐசக் :
தமிழ்நாட்டின் நாசரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையை 12 வயதில் இழந்து, தாயால் வளர்க்கப்பட்ட பத்மசிங் ஐசக் ஒரு முன்மாதிரியான தொழிலதிபர் ஆவார். தனது தாயார் சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற பல்வேறு வேலைகளை முடிக்க மணிக்கணக்கில் உழைப்பதைப் பார்த்த பத்மசிங் ஐசக் பெண்கள் தங்கள் வீடுகளில் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு தொழில் தொடங்க விரும்பினார்.
அவர் தனது தொழில் முனைவோர் பயணத்தை சிறிய பைகளில் “ட்விங்கிள்” திரவ நீலத்தை அறிமுகப்படுத்தி மக்களிடையே உடனடி வெற்றியை பெற்றார். இந்த வெற்றி ஆனது 1995 இல் சமையல் மசாலாக்களை அரைத்து விற்பனை செய்யும் ஆச்சி மசாலா பயணத்தின் தொடக்கமாக அமைந்தது மற்றும் ஆச்சி என்ற பிராண்ட் பிறந்தது. சிறிய அளவில் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும், ஆச்சி மசாலாவின் உற்பத்தி திறன் கிட்டத்தட்ட 50% அதிகரிப்பை பெற்றது. இன்று இந்தியா முழுவதும் ஆச்சி முன்னணி FMCG பிராண்டாக 200+ தயாரிப்புகள் மற்றும் 550+ SKUக்கள் மற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் ஒரு சிறந்த பிராண்டாக உருவெடுத்துள்ளது. இன்று ஆச்சி மசாலா 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் உலகளாவிய நிறுவனமாக சர்வதேச தரத்தில் உள்ளது.
Latest Slideshows
-
Thug Life Teaser : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசர்
-
2025ல் Jioவின் IPO வெளியிட Reliance Jio தயாராகிறது
-
What Are Patta And Chitta Documents Used For : பட்டா மற்றும் சிட்டா ஆவணங்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
-
Interesting Facts About Hornbill Bird : இருவாச்சி பறவைகள் குறித்த சில சுவாரசியமான தகவல்கள்
-
Gold Winner Is HACCP Certified : Gold Winner ஆனது HACCP சான்றிதழ் பெற்றுள்ளது
-
Tomato Benefits In Tamil : தினமும் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
Realme Launched The GT 7 Smartphone : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
-
Amaran Success Meet : அமரன் வெற்றிவிழாவில் எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்
-
IOB Bank Introduction Of Robot Services : IOB வங்கிகளில் சேவைகளை வழங்க ரோபோக்கள் அறிமுகம்
-
Ezhaam Suvai Book Review : ஏழாம் சுவை புத்தக விமர்சனம்