Top 5 Players : டாப் 5 அதிக விலை போன வீரர்களை வாங்கிய அணிகள்

துபாய் :

ஐபிஎல் 2024-க்கான மினி ஏலம் துபாயில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடைபெற்றது. இதில் பத்து அணிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை வாங்க வேண்டும். அதிகபட்சம் எட்டு வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். இந்த நிலையில் இந்த மொத்த ஏலத்தில் 72 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். அணிகள் 30 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளன. இந்த மினி ஏலத்தில் மொத்தம் 230 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொல்கத்தா ராஜஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளும் 25 வீரர்களை தேர்வு செய்துள்ளன. கொல்கத்தா 23 வீரர்களையும், ராஜஸ்தான் 22 வீரர்களையும் தேர்வு செய்துள்ளது.

மினி ஏலம் - Top 5 Players :

Top 5 Players : இந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 31 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 30 கோடியே 35 லட்சம் ரூபாயுடன் 2வது இடத்திலும், சிஎஸ்கே அணி 30 கோடியே 40 லட்சம் ரூபாயும், குஜராத் அணி 30 கோடியே 30 லட்சம் ரூபாயும் செலவிட்டுள்ளது. மும்பை அணி 16 கோடியே 70 லட்சம் ரூபாயும், டெல்லி அணி 19 கோடியே 5 லட்சம் ரூபாயும், லக்னோ அணி 12 கோடியே 20 லட்சம் ரூபாயும், பஞ்சாப் அணி 24 கோடியே 95 லட்சம் ரூபாயும், பெங்களூரு அணி 20 கோடியே 40 லட்சம் ரூபாயும், ராஜஸ்தான் அணி 14 கோடியே 30 லட்சம் ரூபாயும் செலவிட்டுள்ளன.

இதில் மிட்செல் ஸ்டார்க் ரூ.24 கோடியே 75 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளார். அதன்பின் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டார். மூன்றாவது இடத்தில் உள்ள பேரல் மிட்செலுக்கு 14 கோடி ரூபாயை சிஎஸ்கே வழங்கியுள்ளது. நான்காவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி ஹர்ஷல் படேலை 11 கோடியே 75 லட்சத்துக்கும், ஐந்தாம் இடத்தில் உள்ள அல்சாரி ஜோசப்பை பெங்களூரு அணி 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் (Top 5 Players) வாங்கியது.

Latest Slideshows

Leave a Reply