Top 5 Richest Cricketers In The World : Top 5 உலக பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை சச்சின் பெற்றுள்ளார்

உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம்பிடித்து அசத்தியுள்ளனர் :

இந்தியாவில் அதிகம் பின்பற்றப்படும் விளையாட்டாகவும் மற்றும் அதிகம் விரும்பி விளையாடப்படும் விளையாட்டாகவும் கிரிக்கெட் உள்ளது. இந்திய மக்களின் உணர்வோடு ஒன்றி இந்திய மக்களால் திருவிழா போல கொண்டாடப்படும் நிகழ்வுகளாக கிரிக்கெட் லீக்குகள், கிரிக்கெட் நிகழ்வுகள் மற்றும் கிரிக்கெட் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் நிகழ்வுகள், கிரிக்கெட் லீக்குகள், விளம்பரங்கள் மற்றும் விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

தொழில்முறையில் கிரிக்கெட் வீரர்கள் நிறைய பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். IPL போன்ற கிரிக்கெட் தொடர் பணத்தை கொட்டும் குபேரனாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள், மக்களால் இங்கு ஹீரோவை போலவும் மற்றும் கடவுளை போலவும் நடத்தப்படுகிறார்கள். உலக Top 5 பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் (Top 5 Richest Cricketers In The World) 3 இந்திய வீரர்களும் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாராவும் இடம்பெற்றுள்ளனர்.

Top 5 Richest Cricketers In The World :

1. சச்சின் டெண்டுல்கர் : பிசினஸ் இன்சைடரின் படி, ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என சச்சின் அழைக்கப்படுகிறார். இவர் உலக பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலின் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சொத்தின் நிகர மதிப்பானது ஆனது 170 மில்லியன் (இந்திய ரூபாயில் 1500 கோடி) ஆகும். இவர் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார். பெங்களூரில் உள்ள இவரது சச்சின்ஸ் மற்றும் டெண்டுல்கர்ஸ் என்ற உணவகங்கள் நல்ல வருமானம் ஈட்டுகின்றன. மேலும் ஸ்மாஷ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட வணிக முயற்சிகளுடன் இவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்டுகிறார். இவை அனைத்தும் அவரை உலகத்தில் நம்பர் 1 பணக்காரராக ஆக்குகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கையுடன் இணைந்துள்ள சச்சின் டெண்டுல்கர் உலகின் எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உலகத்தால் கருதப்படுகிறார். 

2. மகேந்திர சிங் தோனி : இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து  இரண்டாவது உலக பணக்கார கிரிக்கெட்டராக ‘கேப்டன் கூல்’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இந்திய அணி இவருடைய தலைமையில் தான் மூன்று உலகக் கோப்பைகளை வென்றது. மகேந்திர சிங் தோனி சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், IPL அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இவரது சொத்தின் நிகர மதிப்பானது 111 மில்லியன் (இந்திய ரூபாலியில் 1000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் 2019 ஆம் ஆண்டில் தொடங்கிய Dhoni Entertainment Company வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் நிகர மதிப்பு சுமார் ரூ.1030 கோடியாக உள்ளது. மகேந்திர சிங் தோனி டாக்டா ரஹோ, கார்ஸ்24, கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் கட்டாபுக் போன்ற பல வணிகங்களில் முதலீடு செய்துள்ளார்.

3. விராட் கோலி : இவர் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட், IPL, ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் நல்ல ஊதியத்தை சம்பாதிக்கிறார். மேலும் அவரது உணவகங்கள் மற்றும் வணிக முயற்சியான One8 கம்யூனில் விளையாடுவது உட்பட பலவற்றின் மூலம் நல்ல வருமானத்தைப் பெறுகிறார். இவரது சொத்தின் நிகர மதிப்பானது சுமார் 92 மில்லியன் (இந்திய ரூபாயில் 800 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது. அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, உலகின் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.

4. ரிக்கி பாண்டிங் : உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 4வது இடத்தை பிடித்துள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கின் தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டு ICC கிரிக்கெட் உலகக் கோப்பைகளை (2003 மற்றும் 2007) வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும். இவரது சொத்தின் நிகர மதிப்பானது சுமார் 70 மில்லியன் (இந்திய ரூபாயில் 600 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.  பிசினஸ் இன்சைடர் அறிக்கையானது எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக நினைவுகூரப்படும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கை உலகின் நான்காவது பணக்கார கிரிக்கெட் வீரராக பட்டியலிட்டுள்ளது.

5. பிரையன் லாரா : பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்தின் நிகர மதிப்பானது சுமார் 60 மில்லியன் (இந்திய ரூபாயில் 500 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது. பிரையன் லாரா தனது பேட்டிங் ஸ்டைல் மற்றும் கிரிக்கெட் சாதனைகளுக்காக ‘டிரினிடாட் இளவரசர்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

Latest Slideshows

Leave a Reply