Traffic Permitted in Yanakauni Flyover : யானைக்கவுனி மேம்பாலத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து அனுமதி

8 ஆண்டுகளுக்கு பிறகு யானைக்கவுனி மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி யானைகவுனி மேம்பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் (பேசின்பிரிட்ஜ் சந்திப்பை இணைக்கும்) ஒரு முக்கியமான போக்குவரத்து பாலமாகும். 1933-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த யானைகவுனி மேம்பாலம் பழுதடைந்ததால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து மேம்பாலம் மூடப்பட்டது.

இந்த யானைகவுனி மேம்பாலம் ரெயில்வே பாதை மேலே இருப்பதால் (சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது) சென்னை மாநகராட்சி தெற்கு ரெயில்வே ஒப்புதலுடன் இணைந்து தலா 50% பங்களிப்புடன் சுமார் 44 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பழுதடைந்த பழைய யானைகவுனி மேம்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பால வேலை தொடங்கப்பட்டது.

ஏற்கனவே 50 மீட்டரில் கட்டப்பட்டிருந்த பழைய யானைகவுனி மேம்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் 150 மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டது. இந்த புதிய யானைகவுனி மேம்பாலம் ஆனது வலதுபக்கம் பேசின்பிரிட்ஜ் மற்றும் இடதுபக்கம் சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமனை ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 

வடசென்னை வளர்ச்சிக்கு இந்த புதிய யானைகவுனி மேம்பாலம் முக்கிய பங்காற்றும் :

இந்த புதிய யானைகவுனி மேம்பாலம் (Traffic Permitted in Yanakauni Flyover ) மூலம் சென்னையின் மையப் பகுதி, புரசைவாக்கம், மற்றும் எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லலாம். சென்னை மின்ட் பகுதியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எளிதாகவும் மற்றும் விரைவாகவும் செல்ல முடியும். தெற்கு ரயில்வே அதிகாரிகள்,”இந்த புதிய யானைகவுனி மேம்பாலம் மூலம் ரயில்கள் தாமதமாக வருவது குறையும். மேலும், கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்தனர்.

இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் ஒருவழிப்பாதை ஆனது 16/03/2024 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் 16/03/2024 அன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் மற்றும் பல முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply