Trichy Ejamaan Pannai : பாம்புகளுடன் கொஞ்சலாம், குரங்குகளுடன் விளையாடலாம்...

நம்ம திருச்சியில் இப்படி ஒரு அட்டகாசமான இடமா என்று ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ள எஜமான் பண்ணை என்ற இடம். இங்கே பலவகையான பறவைகளும் பூச்சிகளும் விலங்குகளும் இருக்கின்றன.

எஜமான் பண்ணை :

இந்தப் பண்ணையின் உரிமையாளரான ஜவகர் என்பவரிடம் இங்கு எத்தனை விதமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன என கேட்டபோது, நான் இங்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே இங்கு பண்ணை அமைக்கும் வேலையை தொடங்கி விட்டேன். பல்வேறு வகையான நாடுகளில் இருந்து விலங்குகளையும் பறவைகளையும் பூச்சிகளையும் கொண்டு வந்து இங்கு காட்சிக்காக வைத்திருக்கின்றேன். சீனா, பிரான்ஸ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கூட பல்வேறு வகைப்பட்ட விலங்குகளையும் மற்றும் பறவைகளையும் இறக்குமதி செய்து இங்கு வளர்த்து வருகிறேன்.

இங்கு பெரும்பாலான விலங்குகள் வெளிநாடுகளில் மட்டுமே பார்க்க முடிகின்ற வகையைச் சார்ந்ததாகும். இதனை எப்படியாவது நம் ஊரில் உள்ள நடுத்தர மக்களும் பார்க்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக மட்டுமே நான் இது போன்ற பண்ணையை ஆரம்பித்து மக்களை ரசிக்க வைத்துள்ளேன் என்று கூறினார்.

இங்குள்ள விலங்கினங்களில் சில வகையான, கருப்பு கோழிகள், பந்து மலைப் பாம்பு, பஞ்சாப் குதிரைகள், ஆப்பிரிக்க நாட்டு ஆமைகள் போன்றவை. இத்தோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாடுவதற்காக பல்வேறு வகையான பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன. இனி வருகின்ற நாட்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் இங்கும் படகு சவாரி மற்றும் மழை நடனம் போன்றவை இங்கேயும் உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்குவதற்கு இட வசதிகளும் உண்டு :

மேலும் இங்கு இருக்கின்ற பலவகையான விலங்குகளுடன் புகைப்படம் எடுக்கலாம் மற்றும் குதிரை சவாரி செய்யலாம். புகைப்படம் எடுப்பதற்கு இங்கு நூறு ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. உங்களுடைய வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் குழந்தைகளுடன் சென்று இதை ரசித்து விட்டு வரலாம். இந்த எஜமான் பண்ணை திருச்சி அருகே உள்ள ஆலத்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தப் பண்ணையின் பார்வை நேரம் காலையில் 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி அளவில் நிறைவடையும். இதனால் நேரத்தை கணக்கிட்டு வைத்து அங்கு சென்றாள் பொழுதை நன்றாக கழிக்கலாம். இரவு நேரம் ஆகிவிட்டாலும் வெகு தொலைவு மக்கள் அங்கேயே தங்குவதற்கு இட வசதிகளும் உண்டு.

Latest Slideshows

Leave a Reply