"Trucking King Of India” - விஜய் சங்கேஷ்வர்

விஜய் சங்கேஷ்வர் இந்தியாவின் டிரக்கிங் கிங் (Trucking King Of India) எனச் செல்லமாக அழைக்கப்படுகிறார். ஒரே ஒரு லாரியை வைத்து டிரான்ஸ்போர்ட் பிசினஸைத் தொடங்கிய விஜய் சங்கேஷ்வரிடம் இப்போது 5700 வாகனங்கள் உள்ளன. தற்போது இவரது VRS Logistics நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6142/- கோடி ஆகும். ட்ரான்ஸ்போர்ட் தொழிலில் ஆர்வம் கொண்டு ஆரம்பத்தில்  2 லட்சம் கடனில் வாங்கிய ஒரு லாரியில் சரக்கு வியாபாரத்தை தொடங்கிய விஜய் சங்கேஷ்வர் ஆரம்பத்தில் விபத்துக்கள், தகவல் தொடர்பு இல்லாததால் ஏற்பட்ட  பிரச்சனைகள் மற்றும் தொழிலில் போட்டி போன்ற பிரச்சனைகளால் கடுமையான இழப்புகளைச் சந்தித்தார்.

Trucking King Of India - ஒரே ஒரு லாரியை வைத்து தொழிலை பெரிதாக நடத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்தார். :

ஆனால் ஒரே ஒரு லாரியை வைத்து எப்படி தொழிலை பெரிதாக நடத்த முடியும் என்பதை சங்கேஷ்வர் நிரூபித்துக் காட்டினார். விஜய் சங்கேஷ்வர் கர்நாடகா மாநிலத்தின் தார்வாட்டில் பெடகேரியில் பிறந்தவர். இளங்கலை காமர்ஸ் பட்டப்படிப்பை படித்துள்ளார். அவரது தந்தை BG சங்கேஷ்வர் அண்ட் கோ அச்சகத்தை நிறுவி நடத்தி வந்தார். ஆனால் விஜய்க்கோ எப்போதும் டிரான்ஸ்போர்ட் பிசினஸ் தொடங்கி நடத்துவதில்தான் நாட்டம் இருந்து வந்தது. ஆனால் விஜய்யின் குடும்பத்தார் அவரது தனக்கென்று சொந்தத் தொழிலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் விஜய் அவரது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி தனக்கென்று ஒரு தொழிலைத் தொடங்கினார். யாருக்காகவும் விஜய் அவரது கனவை விட்டுக் கொடுக்கவில்லை. எவ்வளவோ எதிர்ப்பு வந்தபோதும் அதை கண்டுகொள்ளவில்லை. விஜய் தனது டிரான்ஸ்போர்ட் பிசினஸை விஜயானந்த் டிராவல்ஸ் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர் அது VRL Logistics எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

VRL Logistics நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நாட்டின் முன்னணி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களான TVS, APT ஆகியவற்றுடன் சரியாகப் போட்டி போட்டு முன்னிலைக்கு வந்தது. VRL Logistics நிறுவனம் சரக்குப் போக்குவரத்தில் முன்னணி டிரான்ஸ்போர்ட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான லாரிகள், மினி லாரிகள், மினி டிரக்குகள் இருக்கின்றன. இந்தியாவில் இன்றைக்கு விஜய் சங்கேஷ்வரும் குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் (Trucking King Of India) ஒருவராக உள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் சங்கேஷ்வரின் VRL Logistics நிறுவனம் 115% லாபத்தை பங்குச் சந்தைக்கு அளித்தது. விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6142/- கோடி ஆகும். விஜய் மகன், ஆனந்த் சங்கேஷ்வர், VRL Logistics நிறுவன நிர்வாக இயக்குநராக உள்ளார்.

சங்கேஷ்வர் ஏப்ரல் 4, 2017 அன்று திக்விஜய் 24X7 என்ற புதிய கன்னட சேனலைத் தொடங்கினார். Times Of India விஜய் தொடங்கிய செய்தித்தாளை வாங்கிக் கொண்டது. தொழில் துறையில் அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் விஜய் சங்கேஷ்வருக்கு 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஆனது பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

Latest Slideshows

Leave a Reply