அக்டோபர் 1, 2024 முதல் True To Label அமலுக்கு வருகிறது - SEBI

True To Label - என்பதன் அர்த்தம் :

பங்குத் தரகர்கள் (Share Holders), டெபாசிட் பங்கேற்பாளர்கள் (Deposit Holders) மற்றும் தீர்வு உறுப்பினர்களால் இறுதி வாடிக்கையாளருக்கு கட்டணம் விதிக்கப்பட்டால், சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் (MIIகள்) ஆனது அதே தொகையைப் பெறுவதை True To Label உறுதி செய்ய வேண்டும். SEBI-யின் True To Label கட்டணக் கட்டமைப்பானது, தற்போது சிறிய நிறுவனங்கள் அல்லது புரோக்கிங் சேவைகளைத் தொடங்கும் Startup நிறுவனங்களுக்கும் சிறப்புற பங்குபெறும் ஒரு களத்தை உருவாக்குகிறது.

முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த SEBI-யின் True To Label கட்டணக் கட்டமைப்பு உதவும். SEBI (இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) ஆனது ஜூலை 01, 2024 தேதியிட்ட True To Label அறிக்கையை வெளியிட்டது. இந்த SEBI-யின் True To Label அறிக்கை அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

MII இன் சார்ஜ் அமைப்பு, உறுப்பினர்களின் அளவு அல்லது செயல்பாட்டைச் சார்ந்திருக்கும் ஸ்லாப் வாரியான கட்டணத்திற்குப் பதிலாக, அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியாகவும் சமமாகவும் இருக்க வேண்டும் என்று SEBI அறிவுறுத்தியது. SEBI ஆனது அதன் உறுப்பினர்களிடம் MII விதிக்கும் கட்டணங்கள் தொடர்பான தற்போதைய செயல்முறைகளை ஆய்வு செய்து SMAC-யால் உரிய பரிசீலனைக்குப் பிறகு பின்வரும் வழிமுறைகளை வெளியிட்டது.

  • தற்போதுள்ள கட்டண கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்தது.
  • SEBI ஆனது MII-கள் அனைத்தும் கட்டணக் கட்டமைப்புகளுக்கான கூடுதல் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
  • MIIகள் அவற்றின் சார்ஜ் கட்டமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்முறைகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் (தொடர்புடைய துணைச் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவையான திருத்தங்கள் உட்பட, சுற்றறிக்கையை செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை உருவாக்குதல்).
  • மேலும் தொடர்புடைய துணைச் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை MII-கள் திருத்த வேண்டும்.
  • MII-கள் ஆனது தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
  • அவர்களின் வலைத்தளங்களில் சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்.
  • இணையதளத்தில் தகவல்களை பரப்ப  வேண்டும்.
  • சுற்றறிக்கையை செயல்படுத்தும் நிலை குறித்து செபிக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளுக்கு அக்டோபர் 01, 2024-க்குள் இணங்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply