Truth Of Sailors : கப்பல் மாலுமிகளின் மூட நம்பிக்கையும் உண்மையும்...

Truth Of Sailors :

Truth Of Sailors : கடலில் மாலுமிகள் பெரும்பாலும் வணிகத்திற்க்காக கப்பலில் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர். பெரும்பாலும் சரக்குக் கப்பல்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு மாலுமிகள் செலுத்துவர். இவர்களுக்கு அதிகமான மூட நம்பிக்கைகள் உண்டு. இவற்றை பற்றி அவர்கள் பல நூற்றாண்டுகள் பின்பற்றி வந்துள்ளனர். இவற்றில் சில, நமக்கு பெரிய வியப்பை உண்டாக்கலாம். அவை என்னென்ன எனத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முக்கியமாக மூடநம்பிக்கைகளை பற்றி கடலில் பாடக் கூடாது..! கடலில் விசில் அடித்தல் மற்றும் பாடலைப் பாடுதல், வாய்க்குள் முணுமுணுத்தல் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம் என்கின்ற மூடநம்பிக்கை “டச்” நாட்டு மாலுமிகளின் மத்தியில் பரவலாக இருந்துவந்துள்ளது. இதற்குக் காரணம் கடலில் பாடும் கடல் பாடல்கள் கடல் சீற்றம் மற்றும் அலை கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பினர்.

கடல்வழி பயணத்தின் இடையே கடல் கொள்ளையர்கள் அதிகமாக இருந்த காலத்தில், பெரும்பாலும் கப்பலில் வரும் கொள்ளையர்கள் விலையுயர்ந்த பொருட்களை அதிகமாக கொள்ளையடிப்பர். 11-ஆம் நூற்றாண்டு இறுதி காலகட்டத்தில் பெண்கள் மாலுமிகளின் உல்லாச நாயகிகளாகப் பயன்படுத்தப்பட்டனர். கப்பலில் பயணம் செய்யும் பெண்களை உடல் தேவைக்காக கடலில் மாலுமிகள் பயன்படுத்தினால் கப்பலை தங்களால் கரைசேர்க்க முடியாமல் புத்தி திசைமாறும் எனவும் நம்பினர். இதனால் பெரும்பாலும் மாலுமிகள் பெண்களை கப்பலில் நாடுவிட்டு நாடேற்றிச் செல்லமாட்டார்கள். எனவே பெரும்பாலும் பெண்கள் முக்கிய கடல்வழி பயணங்களில் தவிர்க்கப்பட்டனர்.

மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களிடம் பொதுவான ஓர் மூடநம்பிக்கை இருந்ததுவந்துள்ளது. படகில் வாழைப்பழம் அல்லது வாழைத்தாரை கொண்டு சென்றால் அன்றைய தினம் அவர்களுக்கு துரதிர்ஷ்டம் என நினைத்தனர். படகில் வாழைப்பழம் இருந்தால் அன்று அவர்களுக்கு மீன்கள் எதுவும் சிக்காது என நினைத்தனர். 17- ஆம் நூற்றாண்டு காலத்தில் “ஸ்பானிஷ் மீனவர்கள்” இதனை நம்பிவந்தார்கள்.

மாலுமிகள் பொதுவாக கெட்ட வார்த்தைகள் பேசுவது சாதாரண விஷயம். ஆனால் ஒரு சில நாடுகளில் இவர்கள் கடல்வழி பயணத்தின்போது ஒரு சில வார்த்தைகள் உச்சரித்தால் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பினர். தவறிக்கூட அந்த வார்த்தைகளை ஒருபோதும் உச்சரிக்கமாட்டார்கள். “மூழ்குதல்” என்கிற வார்த்தையைக் அவர்கள் கூறினால் கப்பல் மூழ்கிவிடும் எனவும் நம்பினர். மேலும் மாலுமிகள் கடல்வழி பயணத்தின் போது தங்களின் மனைவிமார்களிடம் “குட்பை” என்று கூறமாட்டர்கள். இந்த வார்த்தையை கூறினால் கப்பல் மூழ்கிவிடும் என்று அவர்கள் நம்பினர். இந்த வார்த்தையைக் கூறினால் அது அவர்களது கடைசி கடல்வழி பயணமாகிவிடும் என அஞ்சினர். மேலும் பன்றி, தேவாலயம், பூனை போன்ற சில வார்த்தைகளை துரதிர்ஷ்டமான வார்த்தைகளாக எண்ணி அவற்றைப் தவிர்த்து வந்தனர்.

கப்பலை தங்களின் தாயாக நினைக்கும் மாலுமிகள் அன்று முதல் இன்றுவரை கப்பலைப் பற்றி ஆங்கிலத்தில் கூறும்போது “She” என்றே குறிப்பிடுகின்றனர். நம் அனைவருக்கும் தெரிந்த “டைட்டானிக் கப்பலைப்” பற்றி விவரிக்கும்போதும் இதே வார்த்தையைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மாலுமிகளில் ஒரு சிலர் நிர்வாணப் பெண் சிலை, கடலை சாந்தப்படுத்தும் என நம்பினர். இதனாலேயே பழைய கப்பல்களில் முன்புறங்களில் பெண்ணின் மார்பளவு நிர்வாண சிலையைப் பொருத்தினார்கள்.

கடல் பயணம் மேற்கொள்ளும் முன்னர் கடலில் காரித்துப்பினால் அது அதிர்ஷ்டம் என மாலுமிகள் நினைத்தனர். மேலும் கடலில் “டெக்கில் வைன்” ஊற்றிய பிறகு கப்பலைக் கிளப்பினால் அது அதிர்ஷ்டம் என நினைத்தனர்.

Latest Slideshows

Leave a Reply