80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றும் Tsuchinshan-ATLAS Comet

கடந்த 2023 ஆம் ஆண்டு சீனா வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் விண்வெளியை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது (Tsuchinshan-ATLAS Comet) மங்கலான சிறுகோள் போல ஒன்று சூரியனை நோக்கி வருவதை கண்டுபிடித்தனர். வானியலாளர்கள் முதலில் அதனை சிறுகோள் என்று நினைத்து கண்காணித்து வந்தனர்.

Tsuchinshan-ATLAS Comet :

பிறகு 2023 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள Asteroid Terrestrial Impact Last Alert System (ATLAS) இது சிறுகோள் இல்லை வால் நட்சத்திரம் என்று தெரிவித்தது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வால் நட்சத்திரத்திற்கு Tsuchinshan- ATLAS என பெயர் வைத்து ஒரு வருடமாக கண்காணித்து வந்தனர். இந்த தெளிவற்ற வால் நட்சத்திரத்திற்கு மூடுபனி வால் இருப்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது :

இந்த Tsuchinshan-ATLAS Comet ஆனது அதன் சுற்றுப் பாதையை ஒருமுறை சுற்றி முடிக்க சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். மேலும் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாய்ந்த நம் முன்னோர்கள் இந்த அபூர்வ வால் நட்சத்திரத்தை பார்த்து இருக்கலாம். தற்போது இந்த அரிய வாய்ப்பு நமக்கும் கிடைத்து இருக்கிறது. மேலும் இந்த நட்சத்திரத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.      

செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை பார்க்கலாம் :

இந்த வால் நட்சத்திரத்தை எப்போது பார்க்கலாம் என்றால் செப்டம்பர் 28 தேதி முதல் 30 தேதி வரை காலையில் சூரியன் உதயத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கிழக்கு அடிவானத்தில் இதை பார்க்கலாம். மேலும் வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும் தொலைநோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் அக்டோபர் மாதத்தின் 3-வது வார தொடக்கத்தில் மீண்டும் இந்த Tsuchinshan- ATLAS வால் நட்சத்திரத்தை நாம் மேற்கு திசையில் சற்று தெளிவாக பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த அறிய வால் நட்சத்திரத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நாசா விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் என்பவர் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply