TTDC Recruitment 2024 : தமிழ்நாடு சுற்றுலா கழகத்தில் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (Tamilnadu Tourism Development Corporation) என்பது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி துறையின் கீழ் இந்நிறுவனம் இயக்கப்படுகிறது. தற்போது இந்த சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் 26 துணை பொது மேலாளர் (Deputy General Manager) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (TTDC Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

TTDC Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (TTDC) காலியாக இருக்கும் துணை பொது மேலாளர் (Deputy General Manager) பதவிக்கு மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வி தகுதி (Educational Qualification) : சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இந்த Deputy General Manager பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் இன்ஜினியரிங் (BE) முடித்தவர்களும் (TTDC Recruitment 2024) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     

  3. வயது தகுதி (Age) : சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இந்த Deputy General Manager பணியிடங்களுக்கு 18 வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இந்த Deputy General Manager பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இந்த Deputy General Manager பதவிக்கு முதலில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : தமிழ்நாடு சுற்றுலா கழகத்தில் இந்த Deputy General Manager பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://ttdonline.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

  7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Application Last Date) : இந்த Deputy General Manager பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.10.2024 ஆகும்.

  8. மேலும் விவரங்களுக்கு : https://ttdconline.com/_next/tn.gov.in/TTDC_REC_2024.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply