Tuticorin Double Rail Line : தென்னகத்தின் நெடு நாள் கனவு நினைவானது

பிரதமர் நரேந்திர மோடி மதுரை-தூத்துக்குடி இடையே 160 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை (Tuticorin Double Rail Line) வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதையை 02/01/2023 இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 10.15 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். இன்றைய ஒருநாள் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தின் ரூ1,100 கோடியிலான புதிய முனையத்தை தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் ரூ.20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தென்மாவட்ட மக்களின் கனவு திட்டமான மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தட ரயில் பாதை ஆனது அதில் ஒரு திட்டம் ஆகும். மதுரை-தூத்துக்குடி இடையே ரூ.1,890 கோடி மதிப்பிட்டில் இரட்டை வழித்தடத்துக்கான ரயில் பாதை (Tuticorin Double Rail Line) அமைக்கும் பணி திட்டமிட்டபடி தொடங்கி தற்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. அதனால் மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதையை (Tuticorin Double Rail Line) பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 160 கிலோமீட்டர் தொலைவுக்கு மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை ரயில் பாதை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

Tuticorin Double Rail Line - மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதை பலன்கள் :

இதுவரை ஒற்றை வழித்தடம் ரயில் பாதை தான் மதுரை-தூத்துக்குடி இடையே இருந்தது. இதனால் அந்த  ஒற்றை வழித்தடத்தில் ஒரு ரயில் வரும்போது மற்றொரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் கிராசிங்கிற்காக காத்து நிற்க வேண்டும். தற்போது இரட்டை வழித்தடங்கள்  வழித்தடமாக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் நின்று செல்ல வேண்டிய சூழல் இருக்காது. இந்த இரட்டை வழித்தடங்கள் (Tuticorin Double Rail Line) மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இருந்து திருநெல்வேலி வழியாக தமிழகத்தின் பிற இடங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து இந்த இரட்டை வழித்தடங்கள் மூலம் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் என்பது நன்றாக குறையும்.

மேலும் இந்த மார்க்கத்தில் ஒற்றை ரயில்பாதை காரணமாக அதிகமான ரயில்கள் இயக்கப்படாத சூழல் இருந்தது. தற்போது இந்த இரட்டை வழித்தட மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை மூலம் வரும் நாட்களில் சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் மக்களின் வசதிக்காக இயக்கப்படும். இதுதவிர இந்தியாவின் முக்கிய நகரங்களாக உள்ள சென்னை, கோவை, மும்பை, பெங்களூர் உள்பட பிற ஊர்களுக்கும் திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரியில் இருந்து ரயில்கள் அதிகளவில் இயக்கபட வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இந்த இரட்டை வழித்தட மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை ஆனது தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply