TVK Target 2 Crore Of Membership : 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு

TVK Target 2 Crore Of Membership :

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று காலை சென்னை பனையூரில் உள்ள தலைமைச் செயலக அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், தலைவர்கள் காணொளி வாயிலாக பங்கேற்று நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்பட்டது.  மேலும் அந்தக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு (TVK Target 2 Crore Of Membership) நிர்ணயித்து நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, தமிழக வெற்றிக் கழக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். விரைவில் த.வெ.க தலைவர் விஜய்யால் மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்.

இந்தக் குழுவுடன் இணைந்து புதிதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் முழு அளவிலான உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு விண்ணப்பம் மூலம் மாவட்டம், மாநகரம், நகரம், பேரூர், ஒன்றியம், ஊராட்சி, வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதன்படி, இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் த.வெ.க உறுப்பினர்களாக சேர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் உரிய வாக்காளர் பட்டியலின் நகலை முறையாகப் பெற்று விவரங்களைக் கண்டறிய வேண்டும்.

பூத் கமிட்டியால் அமைக்கப்பட்ட பூத் வாரியான வாக்காளர்களின் கட்சி சார்புள்ளவர்கள் யார்?, எந்த கட்சியையும் சாராதவர்கள் யார்? என்ற விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். மேலும் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டிய கடமையாக கருத வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பயன்படுத்தும்போது, கட்சி தலைமையின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எனவே, இரண்டு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்ற எங்களது இலக்கை உறுதி செய்ய (TVK Target 2 Crore Of Membership) அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply