Twitter Logo Changed! ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்
Twitter Logo Changed: சமூக வலைத்தளங்களை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பலரும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். ட்விட்டரின் உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்றிமைத்துள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய நீலக்குருவிக்கு ட்விட்டரின் உரிமையாளர் எலோன் மஸ்க் மாற்றியுள்ளார். எலோன் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ இவற்றின் லோகோவை ட்விட்டரின் லோகோவாக மாற்றி அமைத்தார்.
எலோன் மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல காரணங்கள் கூறப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் எலோன் மஸ்கின் மீது கொடுத்த வழக்கை மாற்றும் விதமாக இதை செய்திருக்கலாம் என்பது முதன்மையானதாக இருந்தது.
எலோன் மஸ்க் ட்விட்டரின் உரிமையை கடந்த ஆண்டு வாங்கியிருந்தார். அதில் இருந்து அவரின் விருப்பத்திற்கேற்ப பல மாற்றங்களை கொண்டு வந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது, தடை செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் இயங்க அனுமதிப்பது, ட்விட்டர் நிறுவன பொருட்களை விற்பது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடம் சந்தா கட்டணம் வசூலிப்பது என நீட்டிக்கப்பட்டது, என பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் ட்ரேட்மார்க்காக இருந்த ‘நீலக்குருவி’ லோகோவை மாற்றி அமைத்தார். இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த மாற்றம் ட்விட்டர் இணையதளத்தில் மட்டுமே எதிரொலித்தது. ட்விட்டர் மொபைலில் வழக்கம் போல் நீல நிற குருவி லோகோவைத்தான் பார்க்க முடிந்தது. இந்நிலையில் நாய் பட லோகோவை மாற்றி அதற்கு பதிலாக சிட்டுக்குருவியை மாற்றி அமைத்தார் மஸ்க்.
2006 இல் ட்விட்டர் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து லோகோ பல முறை மாற்றப்பட்டது. சமீபத்தில் முதன்முறையாக ஒரு நாய்க்கு பதிலாக நீல நிற குருவி வந்தது. மற்ற எல்லா நேரங்களிலும் நீலக்குருவியில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன. இப்போது மீண்டும் அதே நீலக்குருவி லோகோவாக ட்விட்டருக்கு வந்துள்ளது. “எங்கள் தளத்தின் லோகோ எங்கள் அடையாளம் மட்டுமல்ல, அது எங்கள் சொத்து” என்று ட்விட்டரின் பிராண்ட் டூல்கிட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் ட்விட்டர் மீண்டும் தனது அடையாளத்தை பெற்றுள்ளது.