Twitter New Logo : ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலோன் மஸ்க்...

Twitter New Logo :

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரின் லோகோவை, அதன் உரிமையாளரான எலோன் மஸ்க் மாற்றியுள்ளார். பாரம்பரிய லோகோவான நீல குருவிக்கு பதிலாக ‘X’ என புதிய லோகோவை மஸ்க் மாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அன்று முதல் அந்த தளத்தில் தன் விருப்பத்திற்கு ஏற்ப ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்களை விற்பது, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதிப்பது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடம் சந்தா கட்டணம் வசூலிப்பது என நீட்டிக்கப்படுகிறது. ட்விட்டருக்கு பல போட்டியாளர்கள் தோன்றிய போதிலும், அதை கண்டும் காணாமல் மஸ்க் இதனை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில், ட்விட்டர் தளத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக்குருவி லோகோவை தற்போது ‘எக்ஸ்’ (X) என எலோன் மஸ்க் மாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக எலோன் மஸ்க் மாற்றியிருந்தார். பின்னர் அதை மீண்டும் நீலக்குருவியாக அதனை மாற்றினார். இந்நிலையில், ட்விட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்தார். இது குறித்து ட்விட்டும் செய்திருந்தார். நீலக்குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என்று தெரிவித்திருந்த சூழலில் தற்போது லோகோவை எக்ஸ் (X) என மாற்றியுள்ளார். ‘X’ மீது கொண்ட அன்பின் காரணமாக மஸ்க் இந்த மாற்றத்தை செய்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இதன் கீழ் மஸ்க் உரிமையாளராக உள்ள X கார்ப்பரேஷன் நிறுவன சேவைகளை பயனர்கள் பெற முடியும் என தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply