Types Of Bonds : சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஒரு சில பத்திரங்களின் வகைகள்

பத்திர பதிவு முடிந்ததும் சொத்தை விற்பனை செய்தவரிடம் இருந்து சொத்து வாங்கிய பெயருக்கு சொத்தை மாற்றினால் தான் சொத்து மாற்றமாக கருதப்படும். வீடு, மனை, நிலம் உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஒரு சில பத்திரங்களின் வகைகளை (Types Of Bonds) குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Types Of Bonds :

1.விடுதலைப் பத்திரம் (Release Deed) :

விடுதலைப் பத்திரம் என்பது ஒருவருடைய சொத்துக்கள் முழுவதும் அவர் இறந்த பிறகு அவருடைய இரத்த வாரிசுகள் மற்றும் வாரிசுகளின் பிள்ளைகள் அவர்களின் உரிமையை விட்டுக்கொடுத்து அதற்கு ஈடாக பொருளாகவோ, பணமாகவோ பெற்றுக் கொண்டு எழுதிக் கொடுக்கும் ஆவணமே விடுதலை பத்திரம் (Release Deed) ஆகும்.

2.பரிவர்த்தனை ஆவணம் (Transaction Document) :

பரிவர்த்தனை ஆவணம் என்பது ஒருவர் பெயரில் இருக்கும் சொத்தின் உரிமையை மற்றொருவருக்கு எழுதி கொடுத்துவிட்டு அவர் பெயரில் உள்ள சொத்தின் உரிமையை தனது பெயரில் மாற்றிக்கொள்ளும் ஆவணம் (அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்) பரிவர்த்தனை ஆவணம் (Transaction Document) ஆகும்.

3.சமாதான பத்திரம் (Treaty Of Peace) :

சமாதான பத்திரம் என்பது இரு நபர்களுக்கு இடையே சொத்து சம்பந்தமாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனை, வழி பிரச்சனை, இருநாடுகளுக்கான எல்லைப் பிரச்சனை, போன்றவற்றால் ஏற்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் பேசி அவர்களுக்குள் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் எழுதிக் கொடுக்கும் பத்திரம் சமாதான பத்திரம் (Treaty Of Peace) ஆகும்.

4.கிரைய உடன்படிக்கை ஆவணம் (Purchase Agreement Document) :

கிரைய உடன்படிக்கை ஆவணம் என்பது ஒரு நிறுவனத்தின் பெயரிலோ அல்லது தனிநபர் பெயரிலோ உள்ள சொத்தை வாங்கவும் அல்லது விற்கவும் முடிவு செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே சொத்து முழு விவரம், சொத்தின் நான்கு பக்க எல்லைகள், விலை, நிபந்தனைகள், முன்பணம், கால அவகாசம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எழுதிக்கொண்டு உடன்படிக்கை செய்து கொள்ளும் ஆவணம் கிரைய உடன்படிக்கை ஆவணம் (Purchase Agreement Document) ஆகும்.

5.பொது அதிகார ஆவணம் (General Authority Document) :

பொது அதிகார ஆவணம் என்பது தனிநபர் பெயரிலோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரிலோ உள்ள சொத்துக்களை (அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்) சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் பராமரிக்கவும் அல்லது உறுப்பினர்களின் மூன்றாம் நபர் பராமரிக்கவும், அனுபவிக்கவும் அல்லது விற்பனை செய்யவும் அதிகாரங்களை அளித்து எழுதிக் கொடுப்பது பொது அதிகார ஆவணம் (General Authority Document) ஆகும்.

Latest Slideshows

Leave a Reply