Types Of Houses In India : இந்தியாவில் உள்ள வீடுகளின் வகைகள்

இந்தியாவின் கட்டிடக்கலையானது நம் நாட்டின் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் மக்களின் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது. நாட்டில் உள்ள வீடுகளின் வகைகள் காலநிலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. பண்ணை வீடுகள், பங்களாக்கள், அடுக்குமாடி வீடுகள், மர வீடுகள், அரண்மனை வீடுகள் போன்ற வீடுகளின் வகைகளை (Types Of Houses In India) நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த பதிவில்  இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான வீடுகளின் வகைகள் பற்றி பார்க்கலாம்.

Types Of Houses In India :

  1. பண்ணை வீடு
  2. அரண்மனை வீடு
  3. அடுக்குமாடி வீடு
  4. குட்சா வீடு
  5. கோத்தி வீடு
  6. பங்களா வீடு
  7. பென்ட்ஹவுஸ்

பண்ணை வீடு (Farm House) :

கிராமங்களில் பண்ணை வீடுகளை ‘நாட்டுப்புற வீடு’ என்று அழைக்கப்படுகிறது. பண்ணை வீடுகள் பொதுவாக விவசாய நிலத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. பண்ணை வீட்டில் பெரிய தாழ்வாரம் ஒற்றை மாடி அமைப்புடன் கட்டப்பட்டிருக்கும். கிராமப்புற வாழ்க்கை அனுபவத்தை பண்ணை வீடுகள் வழங்குகின்றன.  

அரண்மனை வீடு (Palace House) :

அரண்மனை வீடுகள் பல்வேறு அரச குடும்பங்களின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை பற்றிய பார்வையை நமக்கு வழங்குகிறது. இந்தியா ஆடம்பரமான பல்வேறு அரண்மனைகளின் தாயகமாக உள்ளது. பண்டைய இராஜாக்களின் செழுமையான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை இந்தியாவில் உள்ள அரண்மனைகளின் கட்டிடக்கலைகளில் தெளிவாக தெரிகிறது.

அடுக்குமாடி வீடு (Apartment House) :

அடுக்குமாடி வீடு என்பது தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களில் அடுக்குமாடி வீடு (Apartment House) அமைந்துள்ளன. பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.    

குட்சா வீடு (Kutcha House) :

குட்சா வீடு என்பது இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் வாழும் பொதுவான வீடு வகையாகும். மேலும் இந்த வீடு அமைப்பதற்கு மண், ஓலை, புல், மூங்கில் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் குட்சா வீடுகளை ‘தற்காலிக வீடுகள்’ என அழைக்கப்படுகின்றன.    

கோத்தி வீடு (Kothi House) :

கோத்தி வீடுகள் பல மாடி கட்டிடத்தையும் திறந்தவெளி முற்றத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. உருது மொழியில் கோத்தி என்றால் ‘பெரிய வீடு’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது கோத்தி வீடுகள் கிராமப்புறங்களில் அல்லது போதுமான வசதி உள்ள (அடுக்கு-3) நகரங்களில் பிரபலமான வீடுகளாகும்.   

பங்களா வீடு (Bungalow House) :

பங்களா வீடுகள் ஓய்வு விடுதிகள் அல்லது விடுமுறை இல்லங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. பங்களா வீடுகள் நமக்கு அமைதியான வாழ்க்கை அனுபவத்தை வழங்குகின்றது. பொழுபோக்கு மற்றும் விசாலமான இடத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு பங்களா வீடுகள் ஏற்றதாக இருக்கும்.

பென்ட்ஹவுஸ் (Penthouse) :

பென்ட்ஹவுஸ் வீடுகள் என்பது கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்திருக்கும் வீடுகளாகும். அடுக்குமாடி வீடுகளை ஒப்பிடும்போது பென்ட்ஹவுஸ் வீடுகள் விசாலமானவை மற்றும் மிகுந்த இயற்கை அமைப்புடன் இணைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply