UAE Provided Land For Hospital Construction : இந்திய தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் - UAE அறிவிப்பு

UAE Provided Land For Hospital Construction :

UAE துணைத் தலைவர் இந்திய தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்டுவதற்காக துபாயில் நிலம் வழங்கியுள்ளதாக நரேந்திர மோடி 14/02/2024 புதன்கிழமை (UAE Provided Land For Hospital Construction) அறிவித்தார். பிரதமர் மோடி இந்திய ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதிகளை வழங்கும் இந்திய சமூக மருத்துவமனைக்கு துபாயில் நிலம் வழங்கியதற்காக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத்துக்கு தனது ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா-(BAPS) ஆல் கட்டப்பட்ட கோயில், அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா 14/02/2024 புதன்கிழமை காலை தொடங்கியது. அபுதாபியில் முதன் முதலாக 27 ஏக்கர் பரப்பளவில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட BAPS இந்து கோவிலை பிரதமர் மோடி 14/02/2024 புதன்கிழமை அன்று திறந்து வைத்தார்.

BAPS இந்து கோவிலை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி உரை :

இந்த BAPS இந்து கோவிலின் வரலாற்று சிறப்பு மிக்க திறப்பு விழாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இந்த BAPS இந்து கோவில், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது என்றார். 14/02/2024 இன்று அபுதாபியில் பிரமாண்டமான மற்றும் புனிதமான கோவில் ஆனது திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆனது மனித வரலாற்றில் இன்று ஒரு பொன் அத்தியாயத்தை எழுதியுள்ளது. இந்தியாவின் மீதான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் அன்பின் பிரதிபலிப்பாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரகாசமான எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாகவும் நான் இங்கு BAPS கோவிலைக் கருதுகிறேன். கோவில் கட்டுமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் பங்கு பாராட்டத்தக்கது. 2015 இல் BAPS கோவிலைக் கட்டுவதற்காக 13.5 ஏக்கர் நிலத்தை அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கினார். பின்பு கூடுதலாக 13.5 ஏக்கர் நிலம் நன்கொடையாக பெறப்பட்டது. கோயிலுக்கான கட்டுமானம் அபுதாபியில் 2019 இல் தொடங்கியது.

பல வருட கடின உழைப்பைக் கொண்ட இந்த கோவிலுக்கு கோவிலுக்கு பகவான் ஸ்வாமிநாராயணின் ஆசி உண்டு என்றார். மேலும் அவர் துபாயில் இந்திய தொழிலாளர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டுவதற்கு நிலம் வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் அறிவித்துள்ளார். இந்த இந்து கோவிலை திறந்து வைத்த பிறகு இந்த அறிவிப்பு ஆனது வந்ததுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இந்திய சமூகத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது  என்று கூறினார். 14/02/2024  அன்று புதன்கிழமை துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “துபாய் ஆனது உலகப் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் மையமாக இருப்பதாகப் பாராட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி அல் நஹ்யான்  தொலை நோக்கு பார்வை மற்றும் உறுதிப்பாடு கொண்ட தலைவர் ஆவார்”  என்று பாராட்டினார்.

Latest Slideshows

Leave a Reply