UCO Bank Apprenticeship 2024 : யூகோ வங்கியில் 544 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு

  • பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, நாடு முழுவதும் 544 அப்ரண்டிஸ்ஷிப் காலியிடங்களை (UCO Bank Apprenticeship 2024) அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் மட்டும் 20 தொழில் பழகுநர் இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள டிகிரி முடித்த இளைஞர்கள் 1 வருட வங்கிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

UCO Bank Apprenticeship 2024 - பணியிட விவரங்கள் :

  • பணி : யூகோ வங்கி 544 தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • வயது வரம்பு : UCO வங்கியின் தொழில்முறை பதவிகளுக்கு 01.07.2024 ஆம் தேதியில் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது மற்றும் அதிகபட்சமாக 28 வயது இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.07.1996 ஆம் தேதியின் முன் பிறந்தவராக இருக்க வேண்டும். 01.07.2004 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவராக இருக்க கூடாது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 15 ஆண்டுகளும் வழங்கப்படும். கணவரை இழந்த பெண்கள், கணவரைப் பிரிந்த பெண்களுக்கு கூடுதலாக 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

  • உதவித்தொகை : யூகோ வங்கியில் தொழில் பழகுநர் இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.

  • கல்வித் தகுதி : 01.07.2024 ஆம் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • தேர்வு செய்யப்படும் முறை : யூகோ வங்கி தொழில் பழகுநர் இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வின் இடம், தேதி மற்றும் தேர்வு மையம் விவரங்கள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாநில மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்வில் மொழி திறன் தேர்வு இருக்கும்.

  • விண்ணப்பிக்கும் முறை : யூகோ வங்கியின் தொழில் பழகுநர் பதவிகளுக்கு (UCO Bank Apprenticeship 2024) விண்ணப்பிப்பவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://ucobank.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த வேலைகள் பற்றிய அறிவிப்புகள் UCO வங்கி இணையதளத்தில் வெளியிடப்படும்.

  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 16/07/2024

Latest Slideshows

Leave a Reply