Udhayanidhi Donates 1 Cr To Nadigar Sangam : நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகரும், திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளருமான உதயநிதி ஸ்டாலின், தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை (Udhayanidhi Donates 1 Cr To Nadigar Sangam) வழங்கினார்.

Udhayanidhi Donates 1 Cr To Nadigar Sangam :

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இதன் கட்டுமான பணி இன்னும் நிறைவடையவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறையே காரணம். இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நடிகர் சங்க தலைவராக நாசர் பணியாற்றி வருகிறார். பொருளாளராக கார்த்தியும், பொதுச் செயலாளராக விஷாலும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளார். தற்போது கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

அதை நிறைவேற்ற வங்கியில் கடன் வாங்க உள்ளதாக நடிகர் சங்க கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி (Udhayanidhi Donates 1 Cr To Nadigar Sangam) அளித்துள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்திக், நாசர், விஷால், பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் சென்னையில் உதயநிதியை சந்தித்து அவரிடம் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை பெற்றுக்கொண்டனர். இதற்கான காசோலையை நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

உதயநிதிக்கு நன்றி தெரிவித்த விஷால் :

உதயநிதி, நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி (Udhayanidhi Donates 1 Cr To Nadigar Sangam) அளித்துள்ள நிலையில், உதயநிதிக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஷால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தை கட்டமைக்க உங்களின் பங்களிப்பிற்கும், அதை விரைவில் கட்டி முடிக்க நீங்கள் விரும்பியதற்கும், நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply