Udhayanidhi Latest Tweet : விஜய்யின் லியோ படம் எப்படி இருக்கு?

Udhayanidhi Latest Tweet :

விஜய்யின் லியோ படத்தைப் பார்த்துவிட்டு அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். உதயநிதி செய்துள்ள ட்வீட் (Udhayanidhi Latest Tweet) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து உருவான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகாததால் லியோ படத்தை மெகா ஹிட் ஆக்க விஜய் இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. படத்தின் பாடல்கள், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, படத்தின் லியோ போஸ்டர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவலும் சமீபத்தில் வெளியானது. அதன்படி, லியோ ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு நலன் கருதி இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழ் திரையுலகமே ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லரே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக லியோ ட்ரெய்லரைப் பார்க்கும்போது படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் உருவாகியிருப்பது தெரிகிறது. விஜய்யின் நடிப்பு அதிகம் பேசப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பார்த்திபன், லியோ என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இந்த இரண்டு வேடங்களிலும் தளபதி தனது தனித்துவமான நடிப்பால் ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படம் (அக்டோபர் 19) நாளை வெளியாக உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு அனிருத் தனது பாணியில் படத்தை விமர்சனம் செய்திருந்தார்.

ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு எப்படி ஸ்மைலி மூலம் அனிருத் விமர்சனம் கொடுத்தாரோ, அதேபோல் லியோவுக்கும் ஸ்மைலி மூலம் விமர்சனம் கொடுத்தார். இதையடுத்து தற்போது லியோ படத்தைப் பார்த்துவிட்டு அமைச்சரும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி விமர்சனம் (Udhayanidhi Latest Tweet) செய்துள்ளார். படம் சிறப்பாக இருப்பதாகவும், லோகேஷ் இயக்கம் வேற லெவலில் இருப்பதாகவும் கூறிய உதயநிதி, படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ட்வீட் (Udhayanidhi Latest Tweet) செய்துள்ளார். உதயநிதி செய்துள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply