Udhayanidhi Stalin Gifts Mari Selvaraj: இயக்குனர் செல்வராஜுக்கு பரிசளித்த உதயநிதி

மாமன்னன் படம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆடம்பர சொகுசு காரைப் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளார்.

சமீபகாலமாக சினிமா துறையில் ஒரு புதிய கலாச்சாரம் நடந்து வருகிறது. ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த படத்தில் நடிக்கும் நடிகருக்கு இயக்குனரோ, தயாரிப்பாளரோ காரை பரிசாக வழங்கி வருகிறார்கள். இது நடிகருக்கு மட்டுமே பொருத்தமானது என்று அர்த்தமல்ல. இயக்குனரும் இதே போன்ற பரிசுகள் கிடைக்கிறது.

அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு உதயநிதி ஆடம்பர கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதை சார்ந்து உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துக்களை பகிர்கிறார்கள். இது உலகத் தமிழர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அம்பேத்கர், அண்ணா, கலைஞர், பெரியார் போன்ற நமது தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூக நீதி சிந்தனைகளையும் இளம் தலைமுறையினரிடம் விதைத்தனர். மேலும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. உலகம் முழுவதும் பறக்க ” மாமன்னன்” க்கு சிறகுகளை தந்த என் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி. கார் பரிசளித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரூபாய். 60 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் கேரியரில் பெஸ்ட் படம் என்றால் அது மாமன்னன் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது வருகிறது.

Latest Slideshows

Leave a Reply