Ugadi 2025 : தெலுங்கு வருட பிறப்பு முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் ‘யுகாதி’ (Ugadi 2025) எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது.
யுகாதி வரலாறு (Ugadi 2025)
யுகாதி என்ற வார்த்தையானது சமஸ்கிருத சொல்லான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) ஆகியவற்றிலிருந்து உருவானது. அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது இதன் பொருளாகும். மேலும் யுகாதி இந்து நாட்காட்டி மாதமான சைத்ராவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் பிரம்மா (படைப்பவர்) பூமியின் பகுதிகளைப் படைக்கத் (Ugadi 2025) தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. யுகாதி தினத்தன்று இந்தியா மட்டுமில்லாமல் மொரீஷியஸ் நாட்டிலும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு கணிசமாக இந்து மக்கள் வசிப்பதால் விடுமுறை அளிக்கப்படுகிறது. தெலுங்கு நாட்காட்டியின்படி ‘உகாதி’ ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
யுகாதி கொண்டாடப்படும் மாநிலங்கள்
இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உகாதி மிகுந்த ஆடம்பரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதே நாளில் ‘குடி பட்வா’ என்ற பெயரில் உகாதி கொண்டாடப்படுகிறது. வட கிழக்கு இந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாக இப்பண்டிகை (Ugadi 2025) குறிக்கப்படுகிறது. ஒடிசாவில் ‘பனா சங்ராந்தியாக’ உகாதி அழைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ‘போய்லா பாய்சாக்’ என்ற பெயரிலும், அசாமில் ‘போஹாக் பிஹு’ என்ற பெயரிலும் உகாதி கொண்டாடப்படுகிறது. மேலும் பெயர்கள் மட்டுமே வேறுபடுகின்றன, ஆனால் இந்த உகாதி பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என அனைத்துமே ஒன்று தான்.
யுகாதி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
இந்த உகாதி தினத்தன்று வேப்ப இலை, உப்பு, மாம்பழம், புளி மற்றும் இனிப்புகள் ஆகிவற்றை கொண்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. பண்டிகை அன்று காலையில் தலையில் எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு பூஜை செய்யலாம். மேலும் முதலில் வேப்ப இலைகளால் (Ugadi 2025) செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பிறகு, மற்ற இனிப்புகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். பச்சடி என்ற பெயரில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு போன்ற சுவைகளை உள்ளடக்கிய சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது. இதுவே உகாதியின் முக்கிய உணவாகும்.
தெலுங்கு புத்தாண்டில் வாழ்க்கையில் நிகழும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் சமமான மன நிலையை உருவாக்க வேண்டும். இந்த உகாதி புத்தாண்டை முன்னிட்டு, அனைவரும் தங்கள் வீடுகளுக்கு வெள்ளை வர்ணம் பூசி மா இலையால் அலங்கரிப்பார்கள். புத்தாண்டின் தொடங்கும் அனைத்து புதிய முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும் என்று பரவலாக மக்களால் நம்பப்படுகிறது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?