UK And Japan Enter Recession : இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு

UK And Japan Enter Recession - உலக நாடுகளில் தொடரும் மந்தநிலை இந்தியாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பு :

இந்தியா தொடர்ந்து பெரும் பொருளாதார நாடாக வளர சாத்தியக்கூறுகள் ஆனது அதிகமாகியுள்ளது. குறிப்பாக ஜப்பான் மற்றும் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை (UK And Japan Enter Recession) இந்தியாவுக்கு பெரும் வளர்ச்சிகள் கிடைப்பதற்கான பொன்னான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இவை முக்கிய காரணமாக அமையலாம். ஜப்பான் மற்றும் பிரிட்டன் நாடுகளில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் எனப் பல பொருளாதார பாதிப்புகள் ஆனது ஏற்பட்டுள்ளன. இதற்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பே முக்கிய காரணமாகும். எந்தளவுக்கு கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி ஆகும்.

கடந்த இரண்டு காலாண்டுகளிலும் பிரிட்டனில் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து இருக்கிறது. பிரிட்டன் நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் எடுத்த பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் பெரியளவில் பலன் தரவில்லை. இந்த 2024 ஆண்டின் இறுதியில் பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், பொருளாதார மந்த நிலை ஆனது ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக ஒரு காலத்தில் உருவெடுத்த ஜப்பான் கூட கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. ஜப்பானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார மந்த நிலை ஆனது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த ஜப்பானை இப்போது 4ஆவது இடத்திற்குச் தள்ளியுள்ளது.

ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு முக்கியமான நாடாகும். ஜெர்மனியில் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகள் ஆனது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் ஆனது ஏற்பட்டுள்ளன. உக்ரைன் போருக்குப் பிறகு ஜெர்மனியில் எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் ஆனது வட்டி விகித உயர்வு, புது கட்டுப்பாடுகள் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால் சிக்கலைச் சந்தித்துள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் சந்தையின் பாதிப்பால் கடுமையாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் பொருளாதார மந்தநிலையும் (UK And Japan Enter Recession) இந்தியா பொருளாதாரத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலை நடத்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. 2023ஆம் ஆண்டில்,

  • அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $27.94 டிரில்லியன்
  • சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $17.5 டிரில்லியன்

ஆகவும் இருந்தன. அதேநேரத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட படுவேகமாக 7% வீதத்தில் வளர்ந்து வருகின்றது.

இந்தியா வரும் காலத்தில் ஒரு மிக முக்கிய நாடாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை :

  • இதுநாள் வரை உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளைச் சீனாவில் மட்டுமே வைத்திருந்தன. இப்போது ஆப்பிள் தொடங்கிப் பல நிறுவனங்களும் தொழிற்சாலைகளை அமைக்க முக்கிய சாய்ஸாக இந்தியா இருப்பதால், இது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உலக பொருளாதாரத்தில் முக்கிய நாடாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
  • தற்போதுள்ள நிலையில், பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2026ல் ஜப்பானையும் மற்றும்  2027ல் ஜெர்மனியையும் இந்தியா முந்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • உலக நாடுகள் பலவும், முதலீடுகளுக்காக இந்தியாவை குறிவைத்துள்ளன.
  • தற்போது இந்தியா ஆனது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply