Ulundurpet Kotravai Statue : ஒரே பெயரில் 1600 ஆண்டுகளாக இருக்கும் ஊர் மற்றும் தொன்மையான கொற்றவைச் சிலை
Ulundurpet Kotravai Statue - தொன்மையான கொற்றவைச் சிலை :
தமிழகத்தின் மிகத் தொன்மையான கொற்றவை சிற்பம் ஆனது உளுந்தூர்பேட்டை அருகே வட்டெழுத்துடன் (Ulundurpet Kotravai Statue) கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் ஸ்ரீதர், தாமரை, குமரவேல், உதயராஜா, சுதாகர் ஆகியோர் அடங்கிய வரலாற்று ஆய்வாளர் குழு ஆனது உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அங்கனூர் கிராமத்தில் அவர்கள் பலகை கல்லில் காளி சிலை ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலின் பெயரில் அது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கனூர் கிராமம் ஆனது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உட்பட்ட கிராமம் ஆகும். அங்கனூர் கிராமத்தின் மத்தியில் உள்ள குளத்தின் கரையில் இந்த கொற்றவை சிற்பம் ஆனது அமைந்துள்ளது. மரங்கள் சூழ அதன் மத்தியில் இந்த கொற்றவை சிற்பம் ஆனது சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக (Ulundurpet Kotravai Statue) இருப்பது கண்டறியப்பட்டது.
தலையைத் தடித்த கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீள் வட்ட முகத்தில், இருகாதுகளிலும் குண்டலமும், கழுத்தில் ஆரம் போன்ற பட்டையான அணிகலனும், அனைத்து தோள் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்து இடையில் அழகான முடிச்சுடன் கூடிய ஆடை தொடைவரை நீண்டு இந்த கொற்றவை சிலை ஆனது காட்சி தருகிறது. தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும் முறையே மற்ற வலது கரங்களில் வாள் மற்றும் அம்பு ஏந்தியபடி மற்றொரு கை முஷ்டி முத்திரையில் இந்த கொற்றவை சிலை சிறப்பாக உள்ளது. இந்த கொற்றவை சிலை மேல் இடது கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கைகள் கேடயம், வில், ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் அமைந்துள்ளது.நீண்ட கொம்புகளுடன் அலங்கரிக்கப்பட்ட கலைமான் ஆனது கொற்றவையின் பின்புறம் வாகனமாக உள்ளது. மொத்தத்தில் கொற்றவையின் சிலை ஆனது எருமை தலையின் மீது கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.
வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கொற்றவையின் இடையருகே ஆங்காங்கே சிதைந்த நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது. அன்கனூர் என்ற ஊரைச் சேர்ந்த ஆறலை என்பவர் இக்கொற்றவை படிமத்தைச் செய்த செய்தியை அந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியை அந்த கல்வெட்டைச் சுத்தம் செய்து படிக்கையில் காணமுடிந்தது. மூத்த கல்வெட்டறிஞர் திரு.ராஜகோபால் சுப்பையா அவர்கள் இக்கல்வெட்டானது 5-ம் நூற்றாண்டை ஒட்டிய எழுத்தமைதியை ஒத்து இருப்பதாக தெரிவித்தார். திரு.ராஜகோபால் சுப்பையா அவர்கள் இந்த கல்வெட்டை படித்து இதனைக் கண்டு பிடித்தார். சங்க இலக்கியங்களில் கொற்றவை வழிபாடு குறித்து குறிப்பிட்டு இருந்தாலும், சிலை வடிவில் இதுவரை ஆவணம் ஆகியுள்ள கொற்றவை சிற்பங்கள் யாவும் 6-ம் நூற்றாண்டுக்கு பின்னான பல்லவர்கள் காலத்தியதே ஆகும். பல்லவர்களுக்குச் சற்று முந்திய காலகட்டத்தைச் சேர்ந்த கொற்றவை முதன் முறையாகப் தமிழகத்தில் கிடைத்திருப்பது வரலாற்றுக்கு புதிய வரவாகும். நடுகல் வழிபாட்டுடன் கொற்றவை வழிபாடும் தொல் தாய் தெய்வ வழிபாட்டின் நீட்சியாக அக்காலகட்டத்திலே சிலை வழிபாடாக எழுச்சியுற்று இருந்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது.
1600 ஆண்டுகளாக ஒரே பெயரில் இருக்கும் ஊர் :
இதுவரை தமிழகத்தில் ஆவணம் செய்யப்பட்டுள்ள கொற்றவைகளுள் இதுவே தொன்மையானதாகும். அந்த கல்வெட்டைச் சுத்தம் செய்து படிக்கையில் அக்கல்வெட்டானது “அங்கனூர் என்ற ஊரைச் சேர்ந்த ஆறலை” என்பவர் இக்கொற்றவை படிமத்தைச் செய்தது (Ulundurpet Kotravai Statue) கண்டறியப்பட்டது. இந்த செய்தி ஆனது அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1600 வருடங்களாக இன்றும் அவ்வூரின் பெயர் “அங்கனூர்” என்றே வழக்கில் உள்ளது என்பது தெரியவருகிறது. இன்றும் அவ்வூரின் பெயர் “அங்கனூர்” என்றே வழக்கில் உள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
Latest Slideshows
-
Seraman Kadhali Book Review : சேரமான் காதலி புத்தக விமர்சனம்
-
IPL 18 Season Starts Today : ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது
-
TNSTC Notification 2025 : அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Veera Dheera Sooran Trailer : வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Coconut Benefits In Tamil : தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
-
Bcci Announces 58 Crore Prize : சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிப்பு
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்