14 ஆண்டுகள் கட்டப்பட்ட Umaid Bhawan Palace பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Umaid Bhawan Palace :
இப்போது உலகெங்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள Umaid Bhawan Palace ஆனது பிரபலமாகி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தின் வசீகரமான நிலப்பரப்புகளில் அமைந்திருக்கும் Umaid Bhawan Palace ஆனது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும் 14 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க கட்டடம் ஆகும். அரண்மனையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் ஜோத்பூரின் தற்போதைய அரச குடும்பம் வாழ்கிறது. மகாராஜா உமைத் சிங்கின் பேரனான இரண்டாம் மகாராஜா கஜ் சிங்கின் தனது குடும்பத்துடன் இங்கு வசிக்கிறார். மன்னர் காஜ் சிங்கின் தாத்தா மஹாராஜா உமைத் சிங்கின் பெயரால் தான் இந்த அரண்மனை அமைந்துள்ளது. மகாராஜா கஜ் சிங், அரண்மனையின் ஒரு பகுதியை ஹோட்டலாகவும் மற்றொறு பகுதியை அருங்காட்சியகமாகவும் மாற்றி உள்ளார். இந்த அரண்மனை பார்வையாளர்களுக்கு அரசர்களின் செழுமையான வாழ்க்கை முறை மற்றும் அரச மகத்துவத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
Umaid Bhawan Palace : இந்த அரண்மனையின் ஹோட்டல் பகுதியை தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் போன்ற சர்வதேச பிரபலங்களின் திருமணங்கள் இந்த அரண்மனையில் நடந்ததைத் தொடர்ந்து, தற்போது ஆடம்பர திருமணம் என்றாலே உதய்ப்பூர் உமைத் பவன் அரண்மனைதான் எல்லோருக்கும் முதல் சாய்ஸ் ஆக மாறிவிட்டது மற்றும் விழாக்களை நடத்த பணக்காரர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த அரண்மனையில் நூலகம், தர்பார் அரங்கம், தனி உணவறைக் கூடங்கள், நீச்சல் குளம், ஸ்பா, 4 டென்னிஸ் மைதானம் உள்ளிட்டவை உள்ளன.
உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் :
சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான தோட்டம் உள்பட மொத்தம் 26 ஏக்கர் பரப்பளவில் இந்த அரண்மனை (Umaid Bhawan Palace) ஆனது அமைந்துள்ளது. மகாராஜா பிரதாப் சிங்கின் சுமார் 50 ஆண்டுகால ஆட்சியின் முடிவில், வறட்சியின் காலம் வரும் என்று கூறிய ஒரு துறவியின் சாபத்துடன் இந்த அரண்மனை இணைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் 1920களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடுமையான வறட்சி மற்றும் பஞ்சத்தை சந்தித்தது. அப்பகுதியில் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கத்தில் ஒரு ஆடம்பரமான அரண்மனையை கட்ட முடிவு செய்து 1929 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு மெதுவான வேகத்தில் இந்த அரண்மனை ஆனது கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் கட்டுமானப் பணிகள் 1929 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி சுமார் 14 ஆண்டுகள் கடந்து 1943ஆம் ஆண்டில் நிறைவு பெற்றுள்ளது. சுமார் 2,000 முதல் 3,000 பேர்கள் இதன் கட்டுமானத்தில் பணிபுரிந்தனர்.
இந்த இடத்தை வடிவமைக்க மகாராஜா உமைத் சிங் நியமித்த கட்டிடக் கலைஞர் ஹென்றி வாகன் லான்செஸ்டர் இந்திய கட்டிடக் கலைஞர் புத்மல் ராயுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் இந்த அரண்மனை தலைமை கட்டிடக் கலைஞர் வித்யாதர் பட்டாச்சார்யா மற்றும் எஸ்எஸ் ஜேக்கப் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது. இது இந்தோ-டெகோ பாணியில் கட்டப்பட்டுள்ளது. தங்க மஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையின் (Umaid Bhawan Palace) உட்புறங்களில், மக்ரானா பளிங்கு மற்றும் பர்மிய தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரண்மனையின் பல பகுதிகள் இந்துக் கட்டிடக்கலை மரபிலும், மத்திய குவிமாடம் மறுமலர்ச்சி பாணியிலும் மற்றும் கோபுரங்கள் ராஜபுத்திர பாணியிலும் கட்டப்பட்டுள்ளன. அப்போதே 11 மில்லியன் ரூபாய் கொண்டு இந்த அரண்மனையை கட்டியுள்ளார்களாம்.
இந்த அரண்மனை ஆனது மேற்கத்திய தொழில்நுட்ப உத்திகள் மற்றும் இந்திய கலைநயம் ஆகிய இரண்டையும் கலந்து கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் மொத்தம் 347 அறைகள், ஒரு தனிப்பட்ட மீட்டிங் ஹால், ஒரு தனியார் டைனிங் ஹால் மற்றும் பல அரங்குகள், முற்றங்கள் உள்ளது. இந்த அரண்மனையில் மஹாராஜா உமைத் சிங் 1943ஆம் ஆண்டில் குடியேறி 4 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். தற்போது அந்த அரண்மனையில் ஹன்வந்த் சிங்கின் மகன் காஜ் சிங் வாழ்ந்து வருகிறார். தற்போது இந்த அரண்மனை ஆனது உலகின் மிகப்பெரிய தனிநபர் குடியிருப்பு ஆகும். Umaid Bhawan Palace அருங்காட்சியகத்தில் பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் Rs.30, குழந்தைகளுக்கு (5-11 வயது) Rs.10 மற்றும் வெளிநாட்டினருக்கு Rs.100 வசூலிக்கப்படுகிறது.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்