'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்' (Unified Pension Scheme - UPS) வெளியிடப்பட்டது

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் 24.08.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டதிற்கான முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசால் Unified Pension Scheme செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'Unified Pension Scheme' - விவரங்கள் :

  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த புதிய ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ ஆனது ஏப்ரல் 1, 2025 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
  • அரசாங்க ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50% வாழ்நாள் முழுவதும் மாதாந்திர பலனாக பெற ‘Unified Pension Scheme’ உறுதி செய்கிறது.
  • 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மத்திய அரசில் பணியில் சேர்ந்த சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கும் (அனைத்து அரசு ஊழியர்களுக்கும்) இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மத்திய அரசு ஊழியர்கள் நேரடியாக இந்த UPS மூலம் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் இந்த புதிய UPS திட்டம்  செயல்படுத்தப்படும்.
  • இந்த UPS திட்டம் ஆனது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியா முழுவதும் NPS இன் கீழ் தற்போதுள்ள 90 லட்சம் அரசு ஊழியர்களும் பயன்பெறுவர்.
  • இந்த UPS திட்டத்தின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்தும் மற்றும் பிற படிகளில் இருந்தும் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும். பிடித்தம் செய்யப்பட்ட இதே தொகையை மத்திய அரசும் செலுத்தும்.
  • மத்திய அரசு ஊழியர் 60 வயதில் ஓய்வு பெறும் போது இந்த UPS திட்டத்தின்படி, அவரது கணக்கில் உள்ள முதிர்வடைந்த தொகையில் 40 விழுக்காட்டையும் மற்றும் 60 வயதுக்கு முன்பாக ஓய்வுபெறுவோர் 80 விழுக்காட்டையும் காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி ஓய்வூதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • இந்த UPS திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி ஊதியத்தின் 50% ஆனது உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

UPS-ன் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் :

  • குறைந்தபட்சம் 10 வருட சேவையை முடித்த ஊழியர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இருந்தபோதும் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் உட்பட திட்டத்தின் முழுப் பலன்களும் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருப்பவர்களுக்குப் பொருந்தும்.
  • தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் இருக்கும் ஊழியர்களுக்கும், NPS இன் கீழ் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை (VRS) தேர்வு செய்பவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
  • எதிர்காலத்தில் UPSC-ல் சேரும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நன்மைகள் :

  • ஓய்வூதியம் பெறுவோர் கடந்த 12 மாதங்களில் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவார்கள். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் உள்ள ஊழியர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்.
  • ஓய்வூதிய நிதிக்கு அரசு தனது பங்களிப்பை 14% இல் இருந்து 18.5% ஆக உயர்த்தும். இந்த அதிகரிப்பு ஆனது பணியாளரின் பங்களிப்பை பாதிக்காது. அது மாறாமல் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply