Union Bank Of India Recruitment 2024 : 500 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (Union Bank Of India) அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு (Union Bank Of India Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பில் தமிழகத்திற்கு 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Union Bank Of India Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியா முழுவதும் 25 மாநிலங்களில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு (Union Bank Of India Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒன்றிய அரசு விதிகளின்படி எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு (Union Bank Of India Recruitment 2024) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியத்துடன் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு (Union Bank Of India Recruitment 2024) ஆன்லைன் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு தேர்வுக்கட்டணமாக பொதுபிரிவு மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.800 ஆகவும், பெண்களுக்கு ரூ.600 ஆகவும், SC /ST  பிரிவினருக்கு ரூ.600 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களுக்கு (Union Bank Of India Recruitment 2024) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 17.09.2024 ஆகும்.

  9. மேலும் விவரங்கள் அறிய : https://www.unionbankofindia.co.in/pdf/Engagement_of_Apprentices_under_Apprentices_Act_1961.pdf என்ற அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply