Union Cabinet Approves Chandrayaan 4 Project : சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

விண்வெளி துறையில் நம் இந்தியா சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் நிலவிலிருந்து மண் துகள்கள், சிறு கற்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய சந்திரயான் 4 திட்டமானது விரைவில் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ Indian Space Research Organisation (ISRO) தெரிவித்தது. நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலனை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்திருந்தது. இதனை தொடர்ந்து சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்துவதற்கு (Union Cabinet Approves Chandrayaan 4 Project) இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது. இந்த சந்திரயான் 4 திட்டத்தின் முக்கிய நோக்கம் பூமியிலிருந்து நிலவுக்கு விண்கலன் வெற்றிகரமாக அனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டு, நிலவிலிருந்து மண் துகள்கள், சிறிய கற்களை எடுத்துக்கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்புவது ஆகும்.

Union Cabinet Approves Chandrayaan 4 Project - சந்திரயான் 4 திட்டம் 2027-ல் செயல்படுத்தப்படும் :

சந்திரயான் 4 திட்டத்தை இஸ்ரோ வரும் 2027-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 5 சவால்கள் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  1. சந்திரயான் 4 விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறக்குதல்.
  2. நிலவின் மண் துகள்கள் மற்றும் சிறு கற்களை சேகரித்தல்.
  3. சந்திரனிலிருந்து வெளியே வருவது.
  4. சந்திரனின் சுற்றுப்பாதையிலிருந்து முற்றிலும் விலகி பூமியை நோக்கி திரும்புவது.
  5. பூமியில் பத்திரமாக மீண்டும் தரையிறங்குவது என 5 கட்டங்கள் இருக்கின்றன.

'வீனஸ் ஆர்பிட்டர்' :

சந்திரயான் 4 திட்டமானது இரண்டு கட்டங்களாக ஏவப்படும் என்றும் இதில் மொத்தம் நான்கு தொகுதிகள் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் (Union Cabinet Approves Chandrayaan 4 Project) அளித்திருக்கிறது. மேலும் இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் (International Space Centre) அமைக்கவும் வெள்ளி கோளை முழுவதுமாக ஆய்வு செய்ய உள்ள ‘வீனஸ் ஆர்பிட்டர்’ மிஷனுக்கும் மத்திய அமைச்சரவையானது  ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும் வரும் 2028 மார்ச் மாதத்தில் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் விண்ணில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு ரூ.20,193 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply