United India Insurance Recruitment : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 200 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

United India Insurance Recruitment

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைடெட்  இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (United India Insurance Recruitment)  நிர்வாக அலுவலர் (Administrative Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்தியா முழுவதும் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (United India Insurance Recruitment) நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2. கல்வி தகுதி (Educational Qualification)

இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Degree) முடித்து இருக்க வேண்டும். மேலும் இன்ஜினியரிங் (Engineering) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (United India Insurance Recruitment) இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு 30.08.2024 தேதி வரை 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. சம்பளம் (Salary Process)

இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.88000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (United India Insurance Recruitment) இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (CBT) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)

இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://uiic.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date)

 இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 5.11.2024 ஆகும்.

8. விண்ணப்பக் கட்டணம் (Application Fees)

இந்த நிர்வாக அலுவலர் (Administrative Officer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1000 ஆகவும், SC/ST பிரிவினருக்கு ரூ. 250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply