Upcoming Changes In Indian Railways From April 1 : April 1 முதல் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் கட்டணப்பணம் செலுத்தும் வசதி (Upcoming Changes In Indian Railways From April 1) :

Indian Railways ஏப்ரல் 1 முதல் பயணிகளுக்காக பெரிய அதிரடி மாற்றங்களைச் செய்யவுள்ளது. எனவே ரயிலில் பயணிப்பவர்கள் இந்த விவரங்களை (Upcoming Changes In Indian Railways From April 1) தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும் துறையில் இந்தியா மிகப்பெரிய நிபுணத்துவத்தை அடைந்துள்ளது. ரயில்வேயும் இப்போது இந்த தொழில்நுட்பத்தை தனது ரயில் பயணிகளுக்கு ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த (Upcoming Changes In Indian Railways From April 1) உள்ளது. இது பயணிகளுக்கு ஒரு வகையில் பணம் செலுத்துவதற்கான வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ரயில் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். Indian Railways QR குறியீடு ஸ்கேனரைத் தொடங்கியுள்ளது. இது ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும். ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் QR குறியீடு மூலம் பணம் செலுத்தி பொது டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

ரயில் பயணிகள் Paytm, Google Pay மற்றும் Phone Pay போன்ற முக்கிய UPI முறைகள் மூலம் பணம் செலுத்தலாம். இது தவிர, Indian Railways ஆனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உணவு முதல் டிக்கெட், அபராதம் மற்றும் பார்க்கிங் வரை அனைத்து இடங்களிலும் QR குறியீடு ஸ்கேனர் வசதியை தொடங்கியுள்ளது. இதனால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள், ரயில்வே ஊழியர்களிடம் உள்ள சிறப்பு சாதனத்தின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் அபராதத்தை செலுத்த முடியும். மேலும் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகள் பிடிபடும்போது அபராதத்தை செலுத்திவிட்டு, சிறை செல்வதை தவிர்க்க முடியும். இதற்காக Indian Railways ஆனது ரயில்வே சோதனை ஊழியர்களுக்கு கையடக்க டெர்மினல் இயந்திரம் வழங்கியுள்ளது. இந்த கையடக்க டெர்மினல் இயந்திரங்கள் மூலம், TT எந்தவொரு பயணிகளிடமிருந்தும் அபராதம் வசூலிக்க முடியும்.

Indian Railways-ல் அடுத்த 5 ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கும் மாற்றங்கள் :

  • Indian Railways இனிமேல் Waiting List என்ற ஒன்றே இல்லாமல் ஆக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Waiting List  பட்டியல் முறையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக Indian Railways ஒரு நாளைக்கு 3000 ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் Indian Railways ஆனது 7 முதல் 8 ஆயிரம் பழைய ரயில்களையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை தகுந்த விதத்தில் நடைமுறைப் படுத்தினால் நிகழ்த்தினால் காத்திருப்போர் பட்டியலுக்கு இனி நிச்சயமாக அவசியம் இருக்காது. ரூ.1 லட்சம் கோடி ஆனது இந்த திட்டத்திற்காக  ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Indian Railways ஆனது அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் 1,309 நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலின் பழைய அறைகள் ஆனது புதுப்பித்து மாற்றப்பட உள்ளன.

  • Indian Railways ஆனது மணிக்கு 250 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய 1000 ரயில்கள் இயக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இனி கவலையில்லாமல் ரயில் பயணிகள்  பயணம் செய்ய முடியும்.

    ரயில்வேயின் இந்த நடவடிக்கைகள் ஆனது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply