Updated EPFO Rules : ATM மற்றும் UPI மூலம் EPFO உறுப்பினர்கள் 1 லட்சம் வரை தங்கள் PF பணத்தை எடுக்கலாம்

இந்திய அரசாங்கம் மக்களின் தேவையை அறிந்து பல்வேறு புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. ATM கார்டு மற்றும் UPI மூலம் EPFO உறுப்பினர்கள் ரூ.1 லட்சம் வரை தங்கள் PF பணத்தை எடுக்க அனுமதிக்கும் இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) பரிந்துரைக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் (Labour and Employment Secretary Sumita Dawra) சுமிதா தேவ்ரா தெரிவித்திருக்கிறார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் UPI மூலமும் விரைவில் பணம் எடுக்கும் செயல்முறையை (Updated EPFO Rules) தொடங்கப் போவதாக தெரிவித்தார். இது EPFO விதிமுறையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் ஆகும்.

EPFO-ல் ஏற்பட்டுள்ள புதிய Updates-கள் (Updated EPFO Rules)

● ரூ.1 லட்சம் வரை PF பணத்தை உடனடியாக ATM மூலம் எடுக்க முடியும். EPFO பயனர்கள் இனி அவர்களுடைய PF Account-ல் இருந்து பணம் எடுக்க 2 அல்லது 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

● புதிய பிரத்தியேக EPFO ATM Card மூலம் பணம் எடுக்கும் செயல்முறையும் (Updated EPFO Rules) கூட விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

● EPFO உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கு இருப்பை நேரடியாக UPI மூலம் சரிபார்க்க முடியும். Bank AC-கணக்கை தேர்ந்தெடுக்கும் மற்றும் மாற்றம் செய்யும் வசதி உள்ளது.

● எளிதாக்கப்பட்டுள்ள கல்வி, வீடு கட்டுதல், திருமணத்திற்கான PF திரும்பப் பெறுதல் முறைகள்-Claim செயல்முறைகள் இப்போது வெறும் 3 நாட்கள்தான் (முன்பு 10-15 நாட்கள் எடுத்தது). அவசர பணத் தேவை உள்ளவர்கள், கல்வி/திருமணம்/வீடு கட்டும் நபர்களுக்கு இந்த புதிய அம்சம் நல்ல பலன் அளிக்கும்.

● 95% கோரிக்கைகள் தானியங்கிமயமாக்கப்பட்டு, கோரிக்கை செயல்முறை வெறும் 3 நாட்களாகக் குறைத்துள்ளது. EPFO அதன் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க பல முக்கியமான மாற்றங்களைச் செய்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

● காகிதப்பணி (Paper works) மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை EPFO அமைப்பு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

● 120-க்கும் மேற்பட்ட தரவுத்தளங்களை ஒருங்கிணைத்து பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்க உள்ளது.

● UPI Based Claim Processing மூலமும் மற்றும் EPFO Claim Processing மூலமும் மக்கள் பணம் எடுக்க வீட்டில் இருந்தபடி விண்ணப்பம் செய்யும் முறையானது நடைமுறைக்கு வரவிருக்கிறது (மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்திற்குள்)

தற்போது மிக விரைவில் EPFO அமைப்பு, ஆன்லைன் மூலம் PF பணத்தை withdrawal செய்யும் புதிய செயல்முறையை (Updated EPFO Rules) நடைமுறைப்படுத்தவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. EPFO-ன் PF திரும்பப்பெறும் முறையில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. PF தொகையை திரும்பப் பெற தற்போது 2-3 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிற முறையில் மாற்றம் ஏற்பட உள்ளது. முந்தைய முறையில் சில நிபந்தனைகளின் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பித்து காத்திருந்து ரூ.50000 மட்டுமே பெற முடிந்தது. இப்போது புதிய முறையில் நேரடியாக UPI/ATM மூலம் எளிதாக Rs.1 லட்சம் வரை பணத்தை பெறலாம். இந்த மாற்றம் 7 கோடி EPFO உறுப்பினர்களின் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியை ஏற்பட்டுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply