UPI-ன் UPI Circle Feature - பயனர்கள் எளிதாக பணம் செலுத்த உதவும்

UPI Circle Feature :

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சார்பில் Global Fintech Fest (GFF) 2024 நிகழ்ச்சி ஆனது கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. இந்த Global Fintech Fest (GFF) 2024 நிகழ்வின் போது புதிய முயற்சிகள் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த புதிய முயற்சிகள் UPI பரிவர்த்தனைகளை இன்னும் எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளன. UPI-ICD எனப்படும் ATM கார்டு இல்லாமல் UPI மூலம் ATM-களில் பணத்தை அனுப்பும் புதிய திட்டமும் (UPI Circle Feature) இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டம் மூலம் டெபிட் கார்டு முதலிய எந்தவிதமான கார்டுகளையும் பயன்படுத்தாமல் பணம் அனுப்ப முடியும். இதனால் பயனர்கள் ATM-ல்  பணம் அனுப்ப செல்லும்போது எந்தவிதமான டெபிட் கார்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

மேலும் பயனர்கள் தங்களது நம்பகமான குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வேண்டியர்வர்களை இரண்டாம் நிலை பயனராக அங்கீகரிக்க உதவுகிறது. பயனர்கள் இல்லாமலேயே குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வேண்டியர்வர்கள் பயனரது UPI-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம். இந்த புதிய UPI-ICD எனப்படும் திட்டம் ஆனது மக்களை பெரிதும் கவரும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ATM கார்டு இல்லாமல் UPI மூலம் ATM-களில் பணத்தை அனுப்பும் திட்டம் ஆனது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். இதை பயனர்கள் இரண்டு முறையில் பராமரிக்கலாம்,

  • ஒவ்வொரு பரிவர்த்தனையையும் அனுமதியுங்கள்
  • குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனையை மட்டும் அனுமதியுங்கள்

என்ற இரண்டு முறைகளில் பயனர்கள் தங்கள் இரண்டாம் நிலை பயனரை இணைத்துக் கொள்ளலாம். Axis Bank ஆனது இந்த அம்சத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் வங்கியாக அறிவிக்கப்பட்டுள்ளது. DM எனப்படும் பணம் போடும் மற்றும் பெறும் அனைத்து டெபாசிட் மெசின்களிலும் விரைவில் இந்த அம்சம் ஆனது இடம்பெற உள்ளது. ஆன்லைன் பேமெண்ட் மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கவும் இந்த அம்சம் ஆனது உதவுகிறது. இந்த UPI Circle Feature ஆனது UPI மூலம் தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பப்பட்ட பணத்தை எளிதில் திரும்ப பெறவும் உதவுகிறது.

Latest Slideshows

Leave a Reply