
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
UPI Service In France : இந்தியாவும் பிரான்சும் இணைந்து பிரான்சில் UPIஐ பயன்பாடு
இந்தியா ஆனது UPI (Unified Payments Interface) மற்றும் RuPay போன்ற டிஜிட்டல் கட்டண முறைகளின் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. இந்தியா குறிப்பாக மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது. இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கட்டண முறையான UPIஐ பிரான்சில் (UPI Service In France) பயன்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 02/02/2024 வெள்ளிக்கிழமை அன்று கூறினார்.
UPI (Unified Payments Interface) :
2016 இல் தொடங்கப்பட்ட UPI (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்), இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறை ஆகும். இந்த UPI ஆனது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமெண்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணி நேரமும் பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. இந்த UPI ஆனது நபருக்கு நபர் (P2P) மற்றும் நபருக்கு வணிகர் (P2M) ஆகிய இரண்டு வகையான கட்டண முறைகளையும் ஆதரிக்கிறது. மேலும் இந்த UPI ஆனது ஒரு பயனருக்கு பணம் அனுப்ப மற்றும் பயனரிடமிருந்து பணம் பெற உதவுகிறது. UPI ஆனது முதன்மையாக உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்காக தொடங்கப்பட்டாலும், தற்போது UPI ஆனது இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRIகள்) சர்வதேச பரிவர்த்தனைகளை உள்ளடக்கியதன் நோக்கத்தை விரிவுபடுத்தி உள்ளது. UPI ஆனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக மாறிவிட்டது மற்றும் தற்போது உலகில் உள்ள சிறந்த கட்டண முறை ஆகும். இந்த டிஜிட்டல் கட்டண முறைகள் ஆனது நிதி பரிமாற்றம் மற்றும் பணம் அனுப்பும் கட்டணத்தை குறைக்க உதவுகிறது.
UPI Service In France - பிரான்சில் UPIஐப் பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளன :
இந்தியாவும் பிரான்சும் இணைந்து பிரான்சில் UPIஐப் பயன்படுத்த (UPI Service In France) ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஈபிள் டவரில் இருந்து தொடங்கும் UPIஐ எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த பிரான்ஸ் ஏற்றுக் கொள்கிறது. அதாவது இந்திய சுற்றுலாப் பயணிகள் இப்போது ரூபாய்களில் செலுத்த முடியும். இந்திய சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்தில் இருந்து UPI ஐப் பயன்படுத்தி பணத்தை ரூபாய்களில் செலுத்த முடியும். பிரான்சில் இந்த UPI கட்டண முறையை அனுமதிப்பதால், இந்தியர்கள் UPI அந்நிய செலாவணி அட்டைகளைப் பயன்படுத்துவதையும் மற்றும் இந்தியர்கள் அங்கு செலவிடும் விதத்தில் பெரும் வாய்ப்புகளையும் திறக்கும்.
UPI Service In France : இந்தியர்கள் பணத்தை செலவழிக்க எடுத்துச் செல்ல வேண்டிய தேவையையும் நீக்குகிறது. Indian Bank, Indian Overseas Bank மற்றும் ICICI ஆகியவை UPI-PayNow இன்டர்லிங்க் மூலம் பணம் அனுப்பக்கூடிய இந்திய வங்கிகள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்கள் உள்நாட்டு வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளில் உள்ள தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்டிருந்தால், UPIஐப் பயன்படுத்தி பணம் அனுப்பவும் மற்றும் பெறவும் முடியும். சிங்கப்பூர், மலேசியா, UAE, பிரான்ஸ், பெனெலக்ஸ் நாடுகள், நேபாளம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை UPI கட்டணங்களை ஏற்கும் வெளிநாட்டு நாடுகள் ஆகும்.
Latest Slideshows
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller