UPSC CDS Jobs : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளில் 457 அதிகாரி பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

UPSC CDS Jobs : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (COMBINED DEFENCE SERVICES EXAMINATION) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.01.2024-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

UPSC CDS Jobs :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (COMBINED DEFENCE SERVICES EXAMINATION) அதிகாரி பணியிடங்களுக்கு 457 காலிபணியிடங்கள் (UPSC CDS Jobs) அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. பணியிட விவரம்

    Indian Military Academy – 100
    Indian Naval Academy – 32
    Air Force Academy – 32
    Officers Training Academy – 293

  3. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை (UG) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சில பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  4. வயதுத் தகுதி (Age Qualification) : COMBINED DEFENCE SERVICES EXAMINATION அதிகாரி பணியிடங்களுக்கு 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த பணியிடங்களுக்கு (UPSC CDS Jobs) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வானது 2 மணி நேரம் நடைபெறும்.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பணியிடங்களுக்கு (UPSC CDS Jobs) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/- மேலும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

  8. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த COMBINED DEFENCE SERVICES EXAMINATION அதிகாரி பணியிடங்களுக்கு 09.01.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  9. மேலும் விவரங்களுக்கு : https://upsc.gov.in/sites/default/files/Notif-CDS-I-2024-Eng-20122023.pdf என்ற என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply