Ursid Meteor Shower : டிசம்பர் 23-ம் தேதி உர்சிட் விண்கல் மழையை வானில் கண்டுகளிக்கலாம்

Ursid Meteor Shower :

இந்தாண்டு வரும் உர்சிட் விண்கல் மழையை (Ursid Meteor Shower) வரும் டிசம்பர் 23-ம் தேதி வானில் கண்டுகளிக்கலாம். இந்தியாவில் எப்படி பார்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இந்த குளிர்காலத்தில் நீங்கள் வானில் ஒரு வர்ணஜாலத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் உர்சிட் விண்கல் மழையை (Ursid Meteor Shower) பார்க்க தவறவிடாதீர்கள். டிசம்பர் 23-ம் தேதி உர்சிட்ஸ் விண்கல் மழையானது உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உர்சிட்ஸ் என்பது ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் வரும் விண்கல் மழையாகும். வால்மீன் 8P/டட்டில் விட்டுச் சென்ற கழிவுகளின் வழியாக பூமி செல்லும் போது இந்த விண்கல் மழை (Ursid Meteor Shower) பொழிவு நிகழ்கிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் வானத்தை திகைக்க வைத்த ‘ஜெமினிட்ஸ்’ போல் இல்லை என்றாலும் உர்சிட் விண்கல் மழையும் (Ursid Meteor Shower) பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும். குளிர்ந்த இரவில் (Shooting Stars) பார்க்க முடியும். உட்சிட்ஸ் 1 மணி நேரத்திற்கு 5 முதல் 10 விண்கற்களை அவற்றின் உச்சத்தில் மிக சிறந்த சூழ்நிலையில் உருவாக்குகின்றன.

உர்சிட்ஸ் மழை நிகழ்வை பார்க்க வெளிச்சம் இல்லாத இடத்தில் இருண்டான பகுதியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். வரும் டிசம்பர் 22 மற்றும் 23 அதிகாலை விடியலுக்கு முன் உர்சிட்ஸ் நிகழ்வு நடைபெறும்.  ‘லிட்டில் பியர்’ அல்லது ‘லிட்டில் டிப்பர்’ என்றும் அழைக்கப்படும் “உர்சா மைனர் விண்மீன்” தொகுப்பில் இருந்து விண்கற்கள் வெளிவருவதாகத் தோன்றும் இது வடக்கு அரைக்கோளத்தில் இரவு முழுவதும் தெரியும். இந்த உர்சா மைனர் விண்மீன் கூட்டத்தைக் கண்டறிய உங்கள் மொபைலில் ஸ்கை மேப் செயலியை பயன்படுத்தலாம். உர்சிட்ஸ் விண்மீன் கூட்டங்களைப் பார்க்க உங்களுக்கு ஸ்பெஷல் கருவி எதுவும் தேவையில்லை. நம் வெறும் கண்களாலே பார்க்கலாம். உர்சிட்ஸ் லோ-கீ நம்பகமான விண்கல் மழையாகும். இது குளிர்கால இரவுகளில் சில பிரகாசங்களை சேர்க்கும்.

Latest Slideshows

Leave a Reply