US firm is investing 400 Cr in Omium Bricks : அமெரிக்க நிறுவனம் ஓமியம் செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது
US firm is investing 400 Cr in Omium Bricks
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆனது தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நாள்தோறும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல முன்னணி நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் ஆனது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க நிறுவனம் ஓமியம் செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க அமெரிக்க ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (US firm is investing 400 Cr in Omium Bricks) கையெழுத்திட்டுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 31-ம்தேதி ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் ஆனது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் எலெக்ட்ரோலைசர்கள் மற்றும் அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane) எலெக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்யும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழிற்சாலை ஆனது அமைக்கப்பட உள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த அமெரிக்க நிறுவனம் ஓமியம் ஆனது அமெரிக்கா, மெக்சிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்டக் குழாய்களை அமைத்துள்ளது. இந்த அமெரிக்க நிறுவனம் ஓமியம் ஆனது பசுமை எரிசக்தி உற்பத்திக்கான சூழலமைப்பை வளர்த்தெடுப்பதிலும் மற்றும் வளங்குன்றா எதிர்காலத்துக்கான பங்களிப்பிலும் குறிப்பிடத்தக்க நகர்வை ஏற்படுத்தும்.
உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துள்ள பிற ஒப்பந்தங்கள்
கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், Nokia, PayPal, Yield Engineering Systems, Microchip Technology, Infing’s Healthcare மற்றும் Applied Materials ஆகிய 6 உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை, மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டுள்ளார்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் Apple, Google மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்த போது தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். Google நிறுவனத்துடன் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நட்பு ஆனது இந்த இரு நாட்டு அரசுகளின் நட்புறவாக மட்டுமின்றி, இந்த இரு நாட்டு மக்களின் நட்புறவாக இருந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்