V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்

இஸ்ரோவின் 10-வது தலைவராக கேரளாவை சேர்ந்த சோமநாத் கடந்த ஜனவரி 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவரின் பதவிக்காலம் வரும் ஜனவரி 13-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் அவர்கள் இஸ்ரோவின் புதிய தலைவராக (V Narayanan Appointed As New ISRO Chief) ஜனவரி 14-ம் தேதி பதவியேற்க உள்ளார். மேலும் இவர் வரும் 2027 ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக பதவி வகிக்கவுள்ளார்.

இஸ்ரோ தலைவராக மீண்டும் ஒரு தமிழர் (V Narayanan Appointed As New ISRO Chief)

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கைலாசவடிவு சிவன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இஸ்ரோவின் 9-வது தலைவராக 4 வருடம் பதவி வகித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராக (V Narayanan Appointed As New ISRO Chief) பதவியேற்க உள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ள வி.நாராயணன் இஸ்ரோவின் திட்டங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

காரக்பூர் ஐஐடியில் படித்தவர்

இந்தியாவின் முன்னணி ஐஐடி நிறுவனமான காரக்பூரில் உள்ள ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் வி.நாராயணன் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் எம்.டெக் படித்த போது கல்லூரியில் சிறந்த மாணவராக விளங்கினார். அதுமட்டுமல்லாமல் வி.நாராயனன் இந்தியாவின் (V Narayanan Appointed As New ISRO Chief) ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் கோல்டு மெடலும் பெற்றுள்ளார்.

டாக்டர் பட்டம்

இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றி உள்ள வி.நாராயணன் அவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இவர் இஸ்ரோவின் GSLV Mark III  ராக்கெட் திட்டத்திற்கு கிரையோஜினிக் என்ஜின் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ககன்யான் திட்டம்

சந்திராயன் 2 மற்றும் சந்திராயன் 3 என இரண்டு திட்டங்களிலும் வி.நாராயணன் முக்கிய பங்காற்றியுள்ளார். இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்போது இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் வி.நாராயணன் (V Narayanan Appointed As New ISRO Chief) தலைமையில் வரும் 2026 ஆம் ஆண்டு செயல்படுத்தபடவுள்ளது.

Latest Slideshows

Leave a Reply